இந்தியாவிலிருந்து தப்பியோடிய கேங்க்ஸ்டர் ரவி பூஜாரி தென்னாப்பிரிக்காவில் கைது செய்யப்பட்டார்.
இந்தியாவிலிருந்து தப்பியோடிய கேங்க்ஸ்டர் ரவி பூஜாரி, தென்னாப்பிரிக்காவில் கைது செய்யப்பட்டுள்ளார். கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த அதிகாரிகள் குழு இந்தியாவுக்கு அவரை அழைத்து வருவதாக காவல்துறை உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். கர்நாடகா உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் மிரட்டி பணம் பறித்தல் மற்றும் கொலை குற்றம் உள்ளிட்ட 200 க்கும் அதிகமான வழக்குகளில் தேடப்படுபவர் பூஜாரி. அவர் இந்தியாவிலிருந்து தப்பிச் சென்று 15 ஆண்டுகள் மேல் ஆகின்றன. மேற்கு ஆப்பிரிக்காவிலுள்ள செனகலில் கடந்த கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டார். அதன் பின்னர் அவர் ஜாமீனில் வெளிவந்தார்.
“அவருடன் நாங்கள் செனகலிலிருந்து வந்து கொண்டுள்ளோம் இப்போது பாரீஸில் உள்ளோம். நாங்கள் ஏர் பிரான்ஸ் விமானத்தில் வருகிறோம். எப்படியும் இந்தியாவிற்கு நள்ளிரவுக்குள் வந்துவிடுவோம்”என ரவி பூஜாரியைக் கைது செய்வதற்கான அணியில் இடம்பெற்றுள்ள ஒரு காவல்துறை அதிகாரி பி.டி.ஐ செய்தி நிறுவனத்திற்கு கூறியுள்ளார்.
இந்நிலையில் கர்நாடகாவைச் சேர்ந்த பூஜாரி, நாளை காலைக்குள் பெங்களூருக்கு அழைத்து வரப்படுவார் என்று போலீஸ் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ), மத்திய புலனாய்வுப் பிரிவு (சிபிஐ) மற்றும் ‘ரா’ஆகியவை இந்த வழக்குக்கான விசாரணையில் ஈடுபட்டுள்ளதாக அந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தென்னாப்பிரிக்க மற்றும் செனகல் காவல்துறையினரின் கூட்டு நடவடிக்கையோடு ஒரு கிராமத்தில் பதுங்கியிருந்த இந்தக் கும்பலை இந்திய அதிகாரிகள் கைது செய்ததாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.