இந்தியா

சென்னைக்கு கச்சா எண்ணெய் ஏற்றி வந்த சரக்கு ரயில் தடம்புரண்டு விபத்து !

jagadeesh

ஆந்திர மாநிலத்திலிருந்து சென்னைக்கு கச்சா எண்ணெய் ஏற்றி வந்த சரக்கு ரயில் தடம்புரண்டு விபத்திற்கு உள்ளானதில் 6 பெட்டிகள் வெடித்து தீப்பிடித்தன.

விசாகப்பட்டினத்தில் இருந்து சென்னைக்கு சரக்கு ரயில் மூலமாக 56 டேங்கர்களில் கச்சா எண்ணெய் எடுத்து வரப்பட்டது. ஓங்கோல் என்ற பகுதியில் மேம்பாலத்தின் மேலே ரயில் வரும்போது தண்டவாளத்தில் ஏற்பட்ட பழுது காரணமாக, சரக்கு ரயில் தடம்புரண்டு கீழே விழுந்தது. இதில் 6 பெட்டிகள் வெடித்துச் சிதறின.

அவற்றில் இருந்த கச்சா எண்ணெய் முழுவதுமாக எரிந்து கொண்டிருக்கிறது. தகவலறிந்த 6 தீயணைப்பு வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க கடுமையாக போராடி வருகிறார்கள். எனினும் தீயைக் கட்டுப்படுத்த முடியவில்லை. மேம்பாலத்தின் மீது தண்டவாளத்தில் பழுதுபார்க்கும் பணி நடைபெற்று வந்த நிலையில் அதில் மண் சேர்ந்ததால் இந்த சரக்கு ரயில் தடம்புரண்டதாக ரயில்வே துறையினர் தெரிவிக்கின்றனர். தண்டவாளத்தை சரி செய்யும் பணியில் ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.