இந்தியாவிலிருந்து ஏற்றுமதியாகும் மசாலா பொருட்களில் எத்திலீன் ஆக்சசைடு கலந்துள்ளதாகவும் இதில் புற்றுநோயை ஏற்படுத்தும் கார்சினோஜன் உள்ளதாகவும் புகார்கள் உள்ளன. இக்காரணத்திற்காக இந்திய மசாலா பொருட்கள் விற்பனைக்கு சிங்கப்பூர், ஹாங்காங் ஆகிய நாடுகளில் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இப்புகார்களை இந்தியா மறுத்திருந்தாலும் வெளிநாடுகளில் தொடர்ந்து குற்றச்சாட்டுகள் இருந்தவண்ணமே இருந்தது. இந்நிலையில் எத்திலீன் ஆக்சைடை கண்டறியும் புதிய வழிமுறையை கண்டுபிடித்துள்ளதாக FSSAI தரப்பில் கூறப்பட்டுள்ளது.
பெட்டிக்குள் இருக்கும் பொருட்களில் எத்திலீன் ஆக்சைடு இருந்தாலும் அதை புதிய நடைமுறையில் துல்லியமாக கண்டுபிடிக்கலாம் என கூறப்படுகிறது.