ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தவர்கள் pt web
இந்தியா

1976 முதல் 2024 வரை.. ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த பிரபலங்கள் மற்றும் தலைவர்கள்

PT WEB

கடந்த 1976-ஆம் ஆண்டு ஜுலை 30-ஆம் தேதி மடகாஸ்கர் நாட்டு பிரதமர் பயணித்த விமானம் விபத்துக்குள்ளானது. இதில் பிரதமர் ஜோயல் ரகோடோமலாலா மற்றும் மடகாஸ்கரின் தலைமை அதிகாரி அல்போன்ஸ் ஆகியோர் உயிரிழந்தனர்.

1987-ஆம் ஆண்டு ஜுன் ஒன்றாம் தேதி, லெபனான் பிரதமர் ரச்சிட் கராமி தலைநகர் பெய்ரூட்டுக்கு ஹெலிகாப்டரில் சென்று கொண்டிருந்தார். அப்போது, இருக்கையின் அடியில் வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு வெடித்ததில் ரச்சிட் கராமி கொல்லப்பட்டார்.

ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி

1990-ஆம் ஆண்டு பிரபல அமெரிக்க இசைக்கலைஞர் ஸ்டீவி ரே வாகன், சென்ற ஹெலிகாப்டர் விஸ்கான்சின் மலைப்பகுதியில் விபத்துக்குள்ளானது. இதில் ஸ்டீவி ரே வாகன் உட்பட உள்ளே இருந்த 4 பேரும் உயிரிழந்தனர்.

2009-ஆம் ஆண்டு அப்போதைய ஆந்திர மாநில முதல்வர் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி பயணம் செய்த ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியதில் அவர் மரணம் அடைந்தார்.

2011-ஆம் ஆண்டு அருணாச்சல பிரதேச மாநிலத்தின் முதல்வராக இருந்த டோர்ஜீ காண்டு பயணித்த ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியது. சீன எல்லை அருகே இவ்விபத்து நேர்ந்திருந்தது.

2019-ஆம் ஆண்டு பிரபல அர்ஜென்டின கால்பந்து வீரர் எமிலியானோ சாலாவை ஏற்றிச்சென்ற விமானம் கால்வாயில் விழுந்து நொறுங்கியது. இதில் நிகழ்விடத்திலேயே எமிலியானோ சாலா உயிரிழந்தார்.

2021-ஆம் ஆண்டு இந்தியாவின் முப்படைத் தலைமை தளபதி பிபின் ராவத் பயணித்த ஹெலிகாப்டர் தமிழகத்தின் நீலகிரி மாவட்டத்தில் விபத்துக்குள்ளானது. இதில் பிபின் ராவத் உட்பட 14 பேர் உயிரிழந்தனர்.

கடந்த ஜனவரியில் ஹாலிவுட் பிரபல நடிகர் கிறிஸ்டின் ஆலிவர் தனது குழந்தைகளுடன் சுற்றுலா சென்றுள்ளார். அப்போது, விமானம் விபத்தில் சிக்கியதில், கிறிஸ்டின் ஆலிவர் மற்றும் அவருடன் பயணித்த இரண்டு குழந்தைகள் உட்பட நான்கு பேர் உயிரிழந்தனர்.

தலைமை தளபதி பிபின் ராவத்

இதேபோல, சில மாதங்களுக்கு முன் சிலியின் முன்னாள் அதிபர் செபஸ்டியன் பினேரா சென்ற விமானம் ஏரியில் விழுந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில், அவர் உயிரிழந்தார் . அவருடன் பயணித்த 3 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டனர்.

இந்நிலையில், ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்ததாக அந்நாட்டு ஊடகங்கள் அறிவித்துள்ளன. அதுமட்டுமின்றி ஹெலிகாப்டரில் பயணித்த அனைவரும் உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடிகை செளந்தர்யா.

காங்கிரஸ் மூத்த தலைவர் மோகன் குமாரமங்கலம், முன்னாள் மத்திய அமைச்சர்கள் மாதவ் ராவ் சிந்தியா, என். வி.என்.சோமு, நடிகை செளந்தர்யா உள்ளிட்ட பிரபலங்களும் ஹெலிகாப்டர் அல்லது சிறிய ரக விமான விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளனர்.