இந்தியா

நக்சல் பாதித்த பகுதியில் செட்டாப் பாக்ஸ் வழங்கப்படும் - வெங்கய்யா நாயுடு

நக்சல் பாதித்த பகுதியில் செட்டாப் பாக்ஸ் வழங்கப்படும் - வெங்கய்யா நாயுடு

webteam

சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்சல் பாதித்த பகுதிகளில் பிரசார் பாரதி நிறுவனம் மூலம் இலவச டி.டி.ஹெச். செட் டாப் பாக்ஸ் வழங்க மத்திய அரசு தீர்மானித்துள்ளது.

பழங்குடியின மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் மத்திய அரசு இந்த திட்டத்தை முன்னெடுக்கிறது. பொதுத்துறை நிறுவனமான பிரசார் பாரதி முதல்
கட்டமாக சுமார் 10 லட்சம் செட் டாப் பாக்ஸ்களை நக்சல் பாதித்த பகுதிகளில் இலவசமாக வழங்க உள்ளது. இந்த திட்டம் இடதுசாரி தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ள
அனைத்து பகுதிகளுக்கும் விரிவாக்கம் செய்யப்படும் என்று ராய்ப்பூரில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மத்திய தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சர் வெங்கய்யா நாயுடு
கூறியுள்ளார். சத்தீஸ்கரில் வழங்கப்படும் செட் டாப் பாக்சுக்கான டிரான்ஸ்மிட்டர்கள் பஸ்தார் மாவட்டத்தின் ஜக்தால்பூரில் அமைக்கப்பட உள்ளது. அந்த டிரான்ஸ்மிட்டர்
நக்சல்கள் விட்டுவைத்தால் மட்டுமே இலவச செட் டாப் பாக்ஸ் மூலம் மக்கள் உலக நிகழ்வுகளை அறிந்துகொள்ள முடியும் என்றும் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார்.