இலவச ரேஷன் திட்டம் முகநூல்
இந்தியா

இலவச ரேஷன் திட்டம் 5 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு! - பிரதமர் மோடி அறிவிப்பு

இலவச ரேஷன் திட்டம் மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படுவதாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். சத்தீஸ்கரில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டபோது பிரதமர் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

PT WEB

வரும் டிசம்பர் மாதத்துடன் இலவச ரேஷன் திட்டம் முடிவடைய உள்ள நிலையில், இந்த திட்டம் மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படும் என அறிவித்துள்ளார் பிரதமர். இது குறித்து சத்தீஸ்கரில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டபோது பேசிய பிரதமர் இந்த அறிவிப்பினை வெளியிட்டார்.

இது குறித்து அவர் தெரிவிக்கையில், ”இந்த அறிவிப்பு மூலம் நாட்டில் உள்ள 80 கோடி மக்கள் பயனடைவார்கள். தொடர்ந்து பேசிய அவர், மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது ஏழை எளிய மக்களுக்காக அவர்கள் எதையும் செய்யவில்லை.

இலவச ரேஷன் திட்டம்

மக்களின் அனைத்து பிரச்னைகளையும் ஒவ்வொன்றாக பாஜக தலைமையிலான அரசு மட்டுமே தீர்த்து வருகிறது. தன்னையும்
ஒட்டுமொத்த ஓ.பி.சி. பிரிவினரையும் காங்கிரஸ் கட்சி அவமதித்து வருகிறது. என்மீதான அவதூறுகளை நான் என்றும் பொருட்படுத்தியதில்லை” என்று தெரிவித்தார்.

இந்நிலையில், 90 இடங்களை உள்ளடக்கிய சத்தீஸ்கர் மாநில சட்டப்பேரவைக்கு வரும் 7 மற்றும் 17 ஆகிய தேதிகளில், இரண்டு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.