சர்ச்சைக்குரிய வங்கி பாதுகாப்பு மசோதாவை அமல்படுத்தினால் வேலைநிறுத்தம் செய்வோம் என வங்கி ஊழியர் சங்கங்கள் அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
வங்கி வாடிக்கையாளர்களை பாதிக்கும் என அஞ்சப்படும் சர்ச்சைக்குரிய எஃப்ஆர்டிஐ (FRDI) மசோதாவில் திருத்தங்கள் கொண்டு வரவேண்டும் என வங்கி ஊழியர் தொழிற் சங்கங்கள் அரசை எச்சரித்துள்ளன. இந்திய வங்கிகளில் மக்களின் டெபாசிட் பணம் 106 லட்சம் கோடி ரூபாய் உள்ளதாகவும் அமெரிக்காவை போல அல்லாமல் இந்திய வங்கிகள் மக்கள் அரும்பாடு பட்டு சேமித்த பணத்தை ஆதாரமாக கொண்டே இயங்குவதாகவும் வங்கி ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது. எனவே மக்களின் பணத்திற்கு அதிகபட்ச பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் இதைச்செய்யத் தவறினால் வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாகவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.