இந்தியா

நிரவ் மோடியின் 283 கோடியை முடக்கியது சுவீஸ் வங்கி 

நிரவ் மோடியின் 283 கோடியை முடக்கியது சுவீஸ் வங்கி 

webteam

நிரவ் மோடி மற்றும் அவரது சகோதரி ஆகியோரின் சுவீஸ் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. 

நிரவ் மோடி மற்றும் அவரது உறவினர் மெஹுல் சோகஷி மீது சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை உள்ளிட்ட அமைப்புகள் 13ஆயிரம் கோடி ரூபாய் பண மோசடி தொடர்பான வழக்கை விசாரித்து வருகிறது. இதனையடுத்து இந்தியாவிலிருந்து வெளியேறிய நிரவ் மோடி யூகே நாட்டில் வசித்து வருகிறார். இவரை இந்தியா கொண்டுவர இந்திய அதிகாரிகள் முயற்சி செய்து வருகின்றனர். 

இந்நிலையில் தற்போது இந்தப் பண மோசடி தொடர்பாக நிரவ் மோடி மற்றும் அவரது சகோதரியின் சுவீஸ் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. அதன்படி இந்த இரண்டு கணக்குகளிலும் மொத்தமாக ரூ.283.16 கோடி வைப்புத் தொகை உள்ளது. இந்தக் கணக்குகளை முடக்குமாறு அமலாக்கத்துறை சுவீஸ் வங்கி அதிகாரிகளுக்கு கடிதம் எழுதியிருந்தனர். இதனைத் தொடர்ந்து இந்தக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. 

இந்தக் கணக்குகளில் நிரவ் மோடி பெயரிலுள்ள வங்கி கணக்கில் 3,73,11,596 டாலர் பணமும் அவரது சகோதரி பூர்வி மோடியின் கணக்கில் 27,38,136 யூரோ பணம் இருந்தது குறிப்பிடத்தக்கது.