கைவல்யா முகநூல்
இந்தியா

பிஞ்சு குழந்தைக்கு இப்படியொரு திறமையா! உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்த ஆந்திராவின் 4 மாத குழந்தை!

ஆந்திரா மாநிலத்தில் 4 மாத குழந்தை ஒன்று உலக சாதனை படைத்துள்ள நிகழ்வு அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

ஜெனிட்டா ரோஸ்லின்

ஆந்திரா மாநிலத்தில் 4 மாத குழந்தை ஒன்று உலக சாதனை படைத்துள்ள நிகழ்வு அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

நவீனயுகமான இந்த காலக்கட்டத்தில் தொழில்நுட்பங்கள் அதீத வளர்ச்சி அடைந்துவருவதைப் போலவே காலத்திற்கு ஏற்றவாறு மனிதர்களும் வளர்ச்சி அடைந்துவருகிறார். அப்படிதான், ஆந்திராவில் நடந்துள்ள சம்பவம் ஒன்று அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் நாடிகாமா நகரை சேர்ந்த தம்பதிக்கு பிறந்த குழந்தைதான் கைவல்யா. நான்கு மாதங்களே ஆன கைவல்யா, தனது மிகச்சிறிய வயதிலேயே காய்கறிகள், பழங்கள்,பறவைகள், புகைப்படங்கள் என வெவ்வேறு 120 பொருட்களை அடையாளும் காணும் திறமையை கொண்டுள்ளார்.

கைவல்யா

தனது குழந்தைக்கு சிறப்பு திறமை இருப்பதை அறிந்த தாய் ஹேமா அதனை இவ்வுலகத்துடன் பகிர்ந்து கொள்ள முடிவு செய்து, தன் குழந்தையின் திறமையை வெளிப்படுத்தும் வீடியோவை நோபல் உலக சாதனைக்கு அனுப்பி வைத்துள்ளார்.

இதனை கண்ட Noble World Records குழுவினர்,  இக்குழந்தை உலக சாதனைக்கு தகுதியானவர் என்று முடிவு செய்த நிலையில் குழந்தைக்கு சிறப்பு சான்றிதழை வழங்கியுள்ளது. இந்நிலையில் உலக சாதனை படைத்த குழந்தையாக மாறியுள்ளார் 4 மாத குழந்தையான கைவல்யா.இதனை அறிந்த கைவல்யாவின் குடும்பத்தினர் தங்களுக்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் நன்றியை தெரிவித்ததுள்ளனர்.