இந்தியா

தாயைப் பிரிந்த காண்டாமிருகக் குட்டி: சேர்த்துவைக்க போராடும் பூங்கா நிர்வாகம்

தாயைப் பிரிந்த காண்டாமிருகக் குட்டி: சேர்த்துவைக்க போராடும் பூங்கா நிர்வாகம்

webteam

கடந்த சில நாட்களாக அசாம் மாநிலத்தின் முப்பது மாவட்டங்களில் தொடர்ந்து பெய்துவரும் கனமழையால் ஆயிரக்கணக்கில் மக்கள் வீடுகளை இழந்துள்ளனர். மேலும் வீட்டுப்பிராணிகளும், விலங்குகளும் தங்குமிடங்களை இழந்து தவிக்கின்றன.

இந்த நிலையில், காசிரங்கா பூங்காவில் மழையில் சிக்கிய பிறந்த நான்கு நாட்களே ஆன காண்டாமிருகக் குட்டியை ஊழியர்கள் மீட்டு தாயுடன் சேர்க்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இதுபற்றிய தகவலை பூங்கா நிர்வாகம் படத்துடன் டிவிட்டரில் வெளியிட்டுள்ளது.    

காசிரங்கா தேசியப் பூங்கா ஊழியரால் காலை நேரத்தில் காப்பாற்றப்பட்ட, பிறந்து  நான்கு நாள் வயது கொண்ட காண்டாமிருகக் குட்டி விரைவில் தாயுடன் சேர்த்துவைப்பதற்கான அனைத்து முயற்சிகளும் எடுக்கப்பட்டுள்ளதாக சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சக மக்கள்தொடர்பு அதிகாரி சைலேந்திர பாண்டே தெரிவித்தார்.

அசாமில் பெய்துவரும் அடைமழையால் எட்டு காண்டாமிருகங்கள் மழைநீரில் மூழ்கியதாகவும், கடந்த மாதத்தில் ஒன்று இயற்கையாக உயிரிழந்துள்ளதாகவும் பூங்கா ஊழியர்கள் செய்தியாளர்களிடம் கூறினர். காசிரங்கா தேசிய பூங்காவில் 2.400 ஒற்றைக் கொம்புள்ள காண்டாமிருகங்கள் உள்ளன