இந்தியா

ஆபாசம் அத்துமீறல் தாக்குதல் ! கால் டாக்ஸி ஓட்டுநருக்கு நேர்ந்த கொடூரம்

rajakannan

பெங்களூரில் வாடிக்கையாளர்கள் போல் நடித்து, கால் டாக்ஸி டிரைவரிடம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

பெங்களூருவைச் சேர்ந்த கால் டாக்ஸி டிரைவர் சோமசேகர். இவருக்கு கடந்த வெள்ளிக்கிழமை(நவ.30) வாடகைக்கு கார் வேண்டுமென்று முன் பதிவு மூலம் போன் வந்துள்ளது. பெங்களூருவின் அடுகோடியில் இருந்து தோமசந்த்ரா பகுதிக்கு செல்ல வேண்டும் என்று பதிவு செய்தவர்கள் கேட்டுள்ளார்கள். அன்று இரவு 10.30 மணிக்கு தனது சவாரியை அவர் தொடங்கினார். நான்கு இந்தப் பயணத்தில் வந்தனர். தன்னுடைய இந்த பயணம் வாழ்க்கையில் நீங்கா வலியாக மாறப்போகிறது என்று அவர் அப்போது நினைக்கவில்லை. 

அடுகோடியில் இருந்து தோமசந்த்ராவுக்கு சுமார் 22 கிலோ மீட்டர். காரில் சென்ற கொண்டிருந்த போது, திடீரென அந்த நான்கு பேரும் டிரைவர் சோமசேகரை கடுமையாக தாக்கியுள்ளனர். பின்னர், காரினை அந்த நான்கு பேரில் ஒருவன் ஓட்டினார். சோமசேகரை தாக்கியதோடு கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் இருந்த பணத்தையும் அவர்கள் பிடிங்கிக் கொண்டனர். அதோடு, அவர்கள் விட்டுவிடவில்லை. நண்பர்கள், உறவினர்களுக்கு போன் செய்து பணம் அனுப்பி வைக்க சொல்லியுள்ளனர். இதோடு, மிகவும் கொடூரமான ஒன்றினையும் அவர்கள் செய்துள்ளனர். டிரைவர் சோமசேகரை மிரட்டி அவரது மனைவிக்கு போன் செய்ய சொல்லியுள்ளனர். அவரது மனைவியின் ஆடைகளை அவிழ்க்க சொல்லி அதனை ஸ்கீரின் ஷாட் எடுத்து வைத்துள்ளனர். பின்னர், எப்படியோ அவர்களிடம் இருந்து சோமசேகர் தப்பித்து வந்துள்ளார். 

தனக்கு நேர்ந்த கொடூரமான அனுபவம் குறித்து சோமசேகர் கூறுகையில், “அவர்கள் சுமார் 100 கிலோமீட்டர் காரினை ஓட்டிச் சென்றார்கள். என்னிடம் உள்ள எல்லா பணத்தையும் அவர்கள் கேட்டார்கள். என்னுடைய வங்கிக் கணக்கில் ரூ9000 வைத்திருந்தேன். அதனை எடுத்துக் கொண்ட அவர்கள், மேற்கொண்டு நண்பர்களிடம் பணம் கேட்டு அனுப்பி வைக்க சொன்னார்கள். என்னுடைய பேடிஎம் கணக்கில் ரூ20 ஆயிரம் வைத்திருந்தேன். என்னுடைய உறவினர் ஒருவருக்கு போன் செய்து பேடிஎம் மூலமாக எனது வங்கி கணக்கிற்கு பணம் அனுப்பி வைக்கச் சொன்னேன். எல்லா பணத்தையும் அவர்கள் எடுத்துக் கொண்டாகள். 

இதற்கிடையில் தான் அவர்கள் சுமார் 30 நிமிடங்கள் காரினை ஓரிடத்தில் நிறுத்தினார்கள். என்னுடைய மனைவிக்கு வீடியோ கால் செய்தார்கள். ஆடையை அவிழ்க்க சொல்லி, ஸ்கிரீன் ஷாட் எடுத்தார்கள். என்னுடைய போனையும் அவர்கள் பறித்துக் கொண்டார்கள். ராமநகர் மாவட்டத்தின் சன்னபட்னா பகுதியில் உள்ள லாட்ஜ்க்கு என்னை அழைத்துச் சென்றார்கள். மறுநாள் (நேற்று) அடைத்து வைக்கப்பட்டிருந்த லாட்ஜ்-ப் பாத் ரூம் ஜன்னல் வழியாக குதித்து தப்பி வந்தேன்” என்றார்.

கொள்ளையர்களிடம் இருந்து தப்பிய டிரைவர் சோமசேகர் சின்னபட்னா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். உடனடியாக அந்த லாட்ஜ்க்கு போலீசார் விரைந்து வந்தனர். ஆனால், அந்த கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டனர்.