உத்தரப் பிரதேச முன்னாள் முதலமைச்சர் கல்யாண் சிங் காலமானார். அவருக்கு வயது 89.
ரத்தத்தில் ஏற்பட்ட தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த கல்யாண் சிங், கடந்த ஜூலை 4-ஆம் தேதி லக்னோவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சையில் அளித்து வந்தனர். இந்த நிலையில் சிகிச்சைப் பலனின்றி அவர் உயிரிழந்தார்.
பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது உத்தரப்பிரதேச முதல்வாக கல்யாண் சிங் இருந்தது குறிப்பிடத்தக்கது. ராஜஸ்தான், இமாச்சலப்பிரதேச ஆளுநராகவும் அவர் பதவி வகித்துள்ளார். கல்யாண் சிங் மறைவுக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.