இந்தியா

மக்களவை முன்னாள் சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி காலமானார்

Rasus

மக்களவை முன்னாள் சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி உடல்நலக்குறைவால் கொல்கத்தாவில் காலமானார். அவருக்கு வயது 89.

மக்களவை முன்னாள் சபாநாயகராக பதவி வகித்தவர் சோம்நாத் சாட்டர்ஜி. சிறுநீரக கோளாறு தொடர்பான பிரச்னைகளால் கடந்த 40 நாட்களாக மருத்துவ சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி கொல்கத்தாவில் இன்று அவர் உயிரிழந்தார். சோம்நாத் சாட்டர்ஜியின் மறைவிற்கு காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

மார்க்சிஸ்ட் கட்சியின் மத்தியக் குழுவில் இடம் பெற்றிருந்த சட்டர்ஜி 10 முறை மக்களவை எம்பி ஆக பதவி வகித்துள்ளார். 2004-ம் ஆண்டிலிருந்து 2009-ஆம் ஆண்டு வரை மக்களவை சபாநாயகராகவும் இருந்துள்ளார்.