பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் சுசில் மோடி புதிய தலைமுறை
இந்தியா

சுசில் மோடி மறைவு: குடியரசுத் தலைவர், பிரதமர் இரங்கல்

பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், பீகார் மாநில முன்னாள் துணை முதலமைச்சருமான சுசில் மோடி காலமானார். அவரது மறைவுக்கு குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு, பிரதமர் மோடி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

PT WEB

பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், பீகார் மாநில முன்னாள் துணை முதலமைச்சருமான சுசில் மோடி காலமானார். அவரது மறைவுக்கு குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு, பிரதமர் மோடி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த பீகார் முன்னாள் துணை முதல்வர் சுசில் குமார் மோடி டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று மாலை அவர் காலாமானார். சுசில் குமார் மோடியின் இறுதிச் சடங்குகள் பாட்னாவில் உள்ள அவரது இல்லத்தில் இன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பீகார் அரசியலில் தவிர்க்க முடியாத சக்தியாக விளங்கிய சுசில் குமார் மோடி உடல் நலக்குறைவு காரணமாக மக்களவைத் தேர்தல் பரப்புரையில் ஈடுபடவில்லை. கடந்த 2005 முதல் 2013 வரையிலும், 2017 முதல் 2020 வரையிலும் பீகார் துணை முதல்வராகப் பணியாற்றிய சுசில் மோடி, மக்களவை, மாநிலங்களவை உறுப்பினராகவும் செயலாற்றிய பெருமைக்குரியவர்.

இந்நிலையில், சுசில் குமார் மோடியின் மறைவு ஈடு செய்ய இயலா இழப்பு என குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு தனது எக்ஸ் வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.மேலும், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார், மேற்கு வந்த முதலமைச்சர் மம்தா பானர்ஜி உள்ளிட்ட பலரும் சுசில் மோடி மறைவிற்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.