இந்தியா

விமான நிலையங்களில் இனி பயோமெட்ரிக் முறை..பேப்பர்களுக்கு வேலையில்லை..!

விமான நிலையங்களில் இனி பயோமெட்ரிக் முறை..பேப்பர்களுக்கு வேலையில்லை..!

rajakannan

இந்திய விமான நிலையங்களில் பயமெட்ரிக் மூலம் பயணிகளை விமானத்துக்குள் அனுமதிக்கும் முறையை அமல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
 
உள்நாட்டு விமான நிலையத்திற்குள் நுழையும் போது பயணிகளின் விபரங்கள் சரிபார்க்கப்படும் மற்றும் அவர்கள் கொண்டு வரும் பொருட்கள் சோதனை செய்யப்படும். இந்நிலையில் மத்திய அரசு அறிமுகப்படுத்தவுள்ள பயோமெட்ரிக் முறை மூலம் பயணிகள் விமான நிலையத்திற்குள் நுழையும் போது அடையாள அட்டைகளை காட்ட தேவையில்லை. அதாவது, விமான நிலையங்களில் பயணிகளின் தகவல்களுடன் அவர்களுடைய ஆதார் எண் மற்றும் பாஸ்போர்ட் எண் இணைக்கப்படும். இதன் மூலம், பயணிகள் விவரங்கள் டிஜிட்டல் முறையில் சரிபார்க்கப்படும். காகிதப் பயன்பாட்டை தவிர்க்கும் வகையில் இந்த பயோமெட்ரிக் முறை அறிமுகமாகவுள்ளது.
 
தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பாதுகாப்பு படை வீரர்களின் எண்ணிக்கையை குறைக்க அரசு திட்டமிட்டுள்ளதாக சிவில் போக்குவரத்து விமான அமைச்சகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உள்நாட்டு விமானங்களில் ஆவணங்கள் எதுவும் இல்லாமல், வெறும் செல்போன் மட்டும் இருந்தால் பயணிக்க முடியும் என்ற சூழ்நிலை விரைவில் வரவுள்ளது.