இந்தியா

இந்தியாவில் ஃபோர்டு நிறுவன ஆலைகளை மூட முடிவு

இந்தியாவில் ஃபோர்டு நிறுவன ஆலைகளை மூட முடிவு

Sinekadhara

அமெரிக்காவைச் சேர்ந்த முன்னணி வாகன நிறுவனமான ஃபோர்டு, இந்தியாவில் உள்ள உற்பத்தி ஆலைகளை மூட முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜெர்மனி, ஸ்பெயின், பிரிட்டன் ஆகிய நாடுகளில் ஃபோர்டு நிறுவன ஆலைகள் ஏற்கெனவே மூடப்பட்ட நிலையில் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

கடந்த 20 வருடங்களாக இந்தியாவில் பல்வேறு வகை கார்களை தொடர்ந்து உற்பத்தி செய்துவரும் ஃபோர்டு நிறுவனம் லாபமின்றி தொடர்ந்து நஷ்டத்தையே சந்தித்து வருவதாகவும், பல்வேறு புதிய மாடல்களை இந்தியாவில் உற்பத்தி செய்தும் நஷ்டமே ஏற்பட்டு வருவதால் உற்பத்தி மிகவும் குறைந்திருப்பதாகக் கூறியிருக்கிறது. இதனால் ஃபோர்டு இந்தியா நிறுவனத்துக்கு 2 பில்லியன் டாலர் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறியிருக்கிறது.

இதனால் தமிழ்நாட்டிலுள்ள மறைமலைநகர், குஜராத்திலுள்ள சனண்ட் ஆகிய இரண்டு இடங்களிலுமுள்ள உற்பத்தி ஆலைகளை மூட முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இனிமேல் இந்தியாவில் கார்களை உற்பத்தி செய்யாமல் அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் வாகனங்களின் விற்பனையை மட்டும் இந்தியாவில் தொடர திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. ஃபோர்டு வாகன உற்பத்தி ஆலை மூடப்பட்டால் சுமார் 4000 தொழிலாளர்கள் வேலையிழக்கும் அபாயம் உள்ளதாகத் தெரிகிறது.