2024ஆம் ஆண்டிற்கான 'உலக கோடீஸ்வரர்கள்' பட்டியலை ஃபோர்ப்ஸ் நேற்று (ஏப்ரல் 3) வெளியிட்டது. இதில் 200 இந்தியர்கள் இடம்பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு இந்தப் பட்டியலில் 169 இந்தியர்கள் இடம்பெற்றிருந்திருந்த நிலையில், தற்போது அது உயர்ந்துள்ளது. 25 இந்தியர்கள் புதிதாக பில்லியனியர் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். முன்னர் இடம்பெற்றிருந்த பைஜு ரவீந்திரன் மற்றும் ரோஹிகா மிஸ்ட்ரி இந்தாண்டு பட்டியலில் இடம்பெற்றவில்லை.
ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவர் முகேஷ் அம்பானி 116 பில்லியன் அமெரிக்க டாலர் (ரூ. 8.7 லட்சம் கோடி) சொத்து மதிப்போடு ஆசிய மற்றும் இந்திய அளவில் முதலிடத்தில் உள்ளார். உலகளவில் 9வது இடத்தைத் தக்கவைத்துள்ளார். 100 பில்லியன் அமெரிக்க டாலர் சொத்து மதிப்பு கொண்ட பட்டியலில் அம்பானி இந்தாண்டு இணைந்துள்ளார். அவர், கடந்த ஆண்டு 83 பில்லியன் டாலர் சொத்து மதிப்பைக் கொண்டிருந்தார்.
அம்பானியைத் தொடர்ந்து இந்திய அளவில், அதானி குழுமத் தலைவர் கெளதம் அதானி இடம்பெற்றுள்ளார். உலகளவில் 17வது இடத்தில் உள்ள அதானியின் சொத்து மதிப்பு, 84 பில்லியன் அமெரிக்க டாலர்.
அடுத்து, இந்திய அளவில் ரூ.2.7 லட்சம் கோடியுடன் ஷிவ் நாடார் பணக்காரராக உள்ளார். தொடர்ந்து சாவித்திரி ஜிண்டால் இந்தியாவின் உலகப் பணக்காரப் பெண்மணியாகத் திகழ்கிறார். இவரது சொத்து மதிப்பு 33.5 பில்லியன் அமெரிக்க டாலர்.
முகேஷ் அம்பானி - ரூ. 8.7 லட்சம் கோடி
கெளதம் அதானி - ரூ. 6.3 லட்சம் கோடி
ஷிவ் நாடார் - ரூ. 2.7 லட்சம் கோடி
சாவித்திரி ஜிண்டால் - ரூ.2.5 லட்சம் கோடி
திலிப் ஷாங்வி - ரூ.2 லட்சம் கோடி
சைரஸ் பூனாவாலா -ரூ. 1.6 லட்சம் கோடி
குஷல் பால் சிங் -ரூ. 1.56 லட்சம் கோடி
குமார் பிர்லா -ரூ. 1.4 லட்சம் கோடி
ராதாகிஷன் தமானி -ரூ.1.3 லட்சம் கோடி
லக்ஷ்மி மிட்டல் -ரூ.1.2 லட்சம் கோடி
ரேணுகா ஜக்தியானி, கபீர் முல்சந்தனி, அஜய் ஜெய்சிங்கானி, ரமேஷ் ஜெய்சிங்கனி, ஓங்கார் கன்வர், அனில் குப்தா, ரமேஷ் குன்ஹிகண்ணன், விஜய் அகர்வால், கிர்தாரி ஜெய்சிங்கனி, இர்பான் ரசாக், நோமன் ரசாக், ரெஸ்வான் ரசாக், நரேஷ் ட்ரேன், ஷிவ்ரதன் அகர்வால், அல்பனா டாங்கி, நரேஷ் ஜெயின், சசிசேகர் பண்டிட், சசிபம்மா ஜாதிதி, மோதிலால் ஓஸ்வால், கல்பனா பரேக், லலித் கைதான், நிகில் மெர்ச்சன்ட், பிரதீப் ரத்தோட், மஹாவீர் பிரசாத் தபரியா, ஷிவ்ரதன் தபரியா.