பணக்காரர்களின் சொத்து மதிப்பு facebook
இந்தியா

100 பணக்காரர்களின் சொத்து மதிப்பு 40 சதவிகிதம் அதிகரிச்சிருக்காம்... வெளிவந்த அதிர்ச்சி பட்டியல்!

இந்தியாவுல மிகப்பெரிய பணக்காரர்கள் வரிசையில் மாறி மாறி அம்பானியும் அதானியும் இடம்பெறுவது வழக்கமான செய்திதாங்க. ஆனால், இந்தியாவில் உள்ள முதல் 100 பணக்காரர்களின் சொத்து மதிப்பு 40 சதவிகிதம் அதிகரிச்சிருக்காம். ஃபோர்ப்ஸ் பட்டியல வெளியிட்டுக்கு.

PT WEB

இந்தியாவுல மிகப்பெரிய பணக்காரர்கள் வரிசையில் மாறி மாறி அம்பானியும் அதானியும் இடம்பெறுவது வழக்கமான செய்திதாங்க. ஆனால், இந்தியாவில் உள்ள முதல் 100 பணக்காரர்களின் சொத்து மதிப்பு 40 சதவிகிதம் அதிகரிச்சிருக்காம். ஃபோர்ப்ஸ் பட்டியல வெளியிட்டுக்கு. இதுபற்றி விரிவாக இன்க்கே பார்க்கலாம்...

2024ஆம் ஆண்டுல இந்தியாவுல மிகப்பெரிய 100 பணக்காரர்கள் பட்டியல வெளியிட்டுருக்கு ஃபோர்ப்ஸ். அதுல யாரு முதல் இடத்துல இருக்காங்கன்னு கேக்குறீங்களா.. முதல்ல சொன்னதுபோல தாங்க... ரிலையன்ஸ் குழுமத்தலைவர் முகேஷ் அம்பானிதான். அவரோட சொத்து மதிப்பு எவ்ளோ தெரியுமா? 119.5 பில்லியன் டாலர்கள், அதாவது இந்திய ரூபாய் மதிப்புல 9 லட்சத்து 91 ஆயிரத்து 850 கோடி ரூபாயாம்.

ஓராண்டுல மட்டும் இவரோட சொத்து மதிப்பு 2 லட்சத்து 28 ஆயிரம் கோடி ரூபா அதிகரிச்சிருக்காம்... ஃபோர்ப்ஸ் சொல்லிருக்கு. அம்பானிக்கு அடுத்த இடத்துல யாரு இருப்பாங்கன்னு உங்களுக்கே தெரிஞ்சிருக்கும்.. வேற யாரு.. கௌதம் அதானிதான்.. இவரோட சொத்து மதிப்பு ஓராண்டுல 3 லட்சத்து 48 ஆயிரம் கோடி ரூபாய் உயர்ந்திருக்கு.

இந்த ஆண்டு இவரோட சொத்து மதிப்பு 9 லட்சத்து 62 ஆயிரத்து 800 கோடியா அதிகரிச்சிருக்குன்னு ஃபோர்ப்ஸ் அறிக்கையில சொல்லிருக்கு. இதல்லாம் விட சூப்பரா ஒரு விஷயத்த கேளுங்க... இந்தியாவுல இருக்கற முதல் 100 பணக்காரர்களோட சொத்துமதிப்பு நடப்பாண்டுல 83 லட்சம் கோடி ரூபாய் அதிகரிச்சிருக்காம். கடந்த ஆண்டுல இருந்த அவங்களோட சொத்து மதிப்போட ஒப்பிடுகையில 40 சதவிகிதம் அதிகமாம்.

அம்பானி, அதானி

சில ஆயிரம் ரூபா சம்பாதிக்கவே நம்மள்ல நிறைய பேரு படாதாபாடு படறோமே.. இது மட்டும் எப்படின்னுதானே கேக்கறீங்க... இந்திய பங்குச்சந்தைகள் ஏற்றம் கண்டதுதான் காரணமாம். குறிப்பா, மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் 30 சதவிகிதம் உயர்ந்ததுதான் முக்கிய காரணமுன்னு ஃபோர்ப்ஸ் பட்டியல்ல சொல்லிருக்கு.