இந்தியா

வேளாண் கடன்களை அரசு உன்னிப்பாக கவனிக்கிறது - நிர்மலா சீதாராமன்

வேளாண் கடன்களை அரசு உன்னிப்பாக கவனிக்கிறது - நிர்மலா சீதாராமன்

webteam

கிராமப் பகுதிகளில் வங்கிகள் வழங்கி வரும் வேளாண் கடன்களை அரசு உன்னிப்பாக கவனித்து வருவதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் மற்றும் உயரதிகாரிகள் உடனான கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களை சந்தித்த நிர்மலா சீதாராமன், வேளாண் கடன் வரம்பு விரிவாக்கப்பட்டிருப்பதாக தெரிவித்தார். நடப்பு நிதியாண்டில் 13.5 லட்சம் கோடி வரை வேளாண் கடன் வ‌ழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருப்பதாக கூறினார். அடுத்த நிதியாண்டிற்குள் வேளாண் கடன் 15 லட்சம் கோடியாக அதிகரிக்க வேண்டும் என்ற இலக்கை அரசு நிச்சயம் எட்டும் என்றும் அவர் கூறியிருக்கிறார்.

கிராமப் பகுதிகளில் செயல்பட்டு வரும் வங்கிகளை அரசு உன்னிப்பாக கவனித்து வருகிறது என்றும், குறிப்பாக கடன் வசதி எந்த அளவிற்கு விரிவாக்கப்பட்டிருக்கிறது என்பது கண்காணிக்கப்பட்டு வருகிறது எனவும் அவர் தெரிவித்தார். நடப்பு நிதியாண்டு பட்ஜெட்டில் வேளாண் கடனுக்காக வங்கிகள் விநியோகிக்க வேண்டிய தொகையை 11 சதவிகிதம் வரை அதிகரித்து நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.