2024-2025 ஆம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட் தாக்கல் தொடங்கியது. முன்னதாக நிதியமைச்சகத்தில் இதற்கான ஆலோசனையில் ஈடுபட்டிருந்தார் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன். தொடர்ந்து குடியரசு தலைவரிடம் ஒப்புதல் பெற்றார். பிறகு நாடாளுமன்றத்திற்கு வருகை தந்தார். அங்கு மத்திய அமைச்சரவை பட்ஜெட்டுக்கு ஒப்புதல் அளித்துள்ளது.
இதனையடுத்து, சரியாக காலை 11 மணி அளவில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கலை செய்ய தொடங்கினார். அடுத்தடுத்த அப்டேட்டை பெற, தொடர்ந்து இணைந்திருங்கள்....
“எங்களது கொள்கை மீது மக்களுக்கு உள்ள நம்பிக்கைதான் இந்த வெற்றி. அதை நாங்கள் தொடர்ந்து நிறைவேற்றுவோம். நாட்டில் பெண்களுக்கும் ஏழைகளுக்கும் முன்னுரிமை அளிக்கப்பட்டு வருகிறது. போலவே விலைவாசியும் கட்டுக்குள் உள்ளது.
நிலைத்தன்மை இல்லாத சூழலில்தான் தற்போதும் உலக வர்த்தகம் இருக்கிறது. கப்பல் போக்குவரத்து துறையில் தொடர்ந்து பிரச்னைகள் நிலவுகின்றன. இது பண வீக்கத்துக்கு வழிவகுக்கிறது. இந்தியாவின் பணவீக்கம் குறைவாகவே இருந்து வருகிறது.
இந்நிலையில் ஏழைகள், பெண்கள் இளைஞர்கள் விவசாயிகள் ஆகிய நான்கு பிரிவினரை அடிப்படையாகக் கொண்டுதான் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.
நாட்டில் கரீப் அன்னை யோஜனா திட்டம் அடுத்த ஐந்தாண்டுகளுக்கு நீட்டிக்கப்படுவதன் மூலமாக 80 லட்சம் கோடி மக்கள் பலன் பெறுவர்.
இந்த பட்ஜெட்டில் 4 கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு திறன் அளிக்கப்படும். இதற்காக கல்வி, தொழில் திறன் மேம்பாடு மற்றும் வேலை வாய்ப்புகளுக்கு 1.48 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. ஒன்பது முக்கிய விஷயங்களை அடிப்படையாகக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது.
மேலும் விவசாயம், திறன் மேம்பாடு மற்றும் வேலைவாய்ப்புக்கான தேவைகள் இந்த பட்ஜெட்டில் பூர்த்தி செய்யப்படும். இந்தியாவை பொருளாதார ரீதியாக வளர்ந்த அடைந்த நாடாக உருவாக்க நீண்ட கால திட்டத்திற்கான அடிப்படைகள் அறிவிக்கப்பட உள்ளன.
விவசாயம்,
வேலைவாய்ப்பு,
சமூகநீதி,
உற்பத்தி,
நகர்ப்புற மேம்பாடு,
எரிசக்தி,
உள்கட்டமைப்பு,
ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு,
அடுத்த தலைமுறை சீர்திருத்தங்கள்
ஆகிய 9 விஷயங்கள் அடிப்படையில் அவற்றை இலக்காக கொண்டு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
நான்கு கோடி இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு மற்றும் திறன் மேம்பாடு உறுதி அளிக்கப்படுகிறது. வேளாண்துறை உற்பத்தி திறனை அதிகரிப்பதில் பட்ஜெட்டில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. ஒரு கோடி விவசாயிகளுக்கு இயற்கை விவசாயம் செய்ய பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
பருப்பு வகைகள் மற்றும் சமையல் எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும். ஒரு கோடி விவசாயிகளுக்கு இயற்கை விவசாயம் செய்வது தொடர்பான பயிற்சி வழங்கப்படுகின்றது இதற்கான சிறப்பு சான்றிதழ்கள் வழங்கப்படும். கடுகு நிலக்கடலை எண் சூரியகாந்தி உற்பத்தியை அதிகரிக்க திட்டமிட்டுள்ளோம்.
விவசாயத் துறையில் நவீனத்துவம் புகுத்தப்படும். கூட்டுறவு சங்கங்கள் வளர்ச்சிக்கு புதிய திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. டிஜிட்டல் முறையில் காரி வேளாண் பொருட்கள் தொடர்பான சர்வே எடுக்கப்படும். வேளாண்துறைக்கு ஒன்றரை லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்
400 மாவட்டங்களில் டிஜிட்டல் வேளாண் பொருள் சர்வே காண அட்டைகள் வழங்கப்படும். புதிதாக பணிகளில் இணைவோருக்கு அரசு தரப்பில் ஒரு மாத சம்பளம் வழங்கப்படும். உற்பத்தி துறையில் வேலை வாய்ப்புகளை உருவாக்க புதிய திட்டம் உருவாக்கப்படும். EPFO மூலம் சலுகை வழங்கப்படும்” என்றார்.
“பணியிடத்தில் பெண்களின் பங்களிப்பை ஊக்குவிக்க, நாட்டில் பணிபுரியும் பெண்கள் விடுதிகள் அமைக்கப்படும்.
காலநிலைக்கு ஏற்ற விதைகளை உருவாக்க தனியார் துறை, டொமைன் நிபுணர்கள் மற்றும் பிறருக்கு அரசாங்கம் நிதி வழங்கும்.
புதிதாக பணியில் சேரும் அனைத்து ஊழியர்களுக்கும் ஒரு மாத சம்பளம் வழங்கப்படும். இந்த தொகை ஊழியர்களுக்கு வருங்கால வைப்பு நிதியாக வழங்கப்படும்”
"இந்தத் திட்டம் அனைத்துத் துறைகளிலும் பணிபுரியும் அனைத்து நபர்களுக்காகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 210 லட்சம் இளைஞர்கள் பயனடைவார்கள்"நிர்மலா சீதாராமன்
“விவசாயம் மற்றும் அது சார்ந்த துறைகளுக்கு ரூ.1.52 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. அடுத்த இரண்டு ஆண்டுகளில் ஒரு கோடி விவசாயிகள் இயற்கை விவசாயத்தில் ஈடுபடுவார்கள்.
இயற்கை விவசாயத்தை நோக்கிய இந்த நகர்வு நிலையான விவசாய நடைமுறைகளை ஊக்குவிப்பதற்காகவும், இரசாயன உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகளை சார்ந்திருப்பதைக் குறைக்கவும் உதவும்.
இயற்கை விவசாயம் மண்ணின் ஆரோக்கியம் மற்றும் பல்லுயிர் பெருக்கத்தை அதிகரிப்பது மட்டுமல்லாமல், விவசாயிகளுக்கு சாகுபடி செலவையும் குறைக்கிறது. இதனால் அவர்களின் லாபம் அதிகரிக்கும். இதை கருத்தில்கொண்டு, அரசாங்கம் பெரிய அளவிலான காய்கறி உற்பத்தி குழுக்களை ஊக்குவிக்கும்.
புதிய அதிக மகசூல் தரக்கூடிய, காலநிலையை தாங்கும்... 109 உரங்கள் விவசாயிகளுக்கு வழங்கப்படும். 10,000 தேவை அடிப்படையிலான உயிர் உள்ளீட்டு மையங்கள் நிறுவப்பட்டு, எண்ணெய் விதைகளின் உற்பத்தி, சேமிப்பு, சந்தைப்படுத்தல் ஆகியவற்றை வலுப்படுத்த வேண்டும்
மாநில அரசுகளுடன் இணைந்து டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பை அரசாங்கம் ஊக்குவிக்கும். இந்த டிஜிட்டல் கட்டமைப்பானது வானிலை முன்னறிவிப்புகள், பயிர் ஆலோசனை சேவைகள் மற்றும் சந்தை விலைகள் போன்ற முக்கிய தகவல்களை விவசாயிகளுக்கு வழங்கும்.
FY25 இல் 400 மாவட்டங்களில் கரீஃப் காலத்திற்கான டிஜிட்டல் பயிர் கணக்கெடுப்பு மேற்கொள்ளப்படும். ஐந்து மாநிலங்களில் ஜன் சமர்த் அடிப்படையிலான கிசான் கிரெடிட் கார்டுகளை வழங்குதல் செயல்படுத்தப்படும். இறால் வளர்ப்பு, பதப்படுத்துதல் மற்றும் ஏற்றுமதிக்கான நிதியுதவி நபார்டு மூலம் எளிதாக்கப்படும்”
பீகார் அடிக்கடி வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுகிறது என்பதால், அங்குள்ள பலர் மாநிலத்தை விட்டு வெளியேறுகின்றனர். நேபாளத்தில் இந்தப் பிரச்னைகளைத் தீர்ப்பதற்கான திட்டங்கள் எதுவும் முன்னெடுக்கப்படவில்லை. ஆகவே பீகாரின் வெள்ள நிவாரணத் திட்டங்களுக்கு ₹11,500 கோடி நிதியுதவி அம்மாநிலத்துக்கு ஒதுக்கப்படுகிறது.
நம் அண்டை நாட்டிலிருந்து நமக்கு வரும் பிரம்மபுத்திரா நதி மற்றும் அதன் கிளை நதிகளினால் ஒவ்வொரு ஆண்டும் அசாம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு வருகிறது. அப்படி பாதிக்கப்படுவோருக்கு, உரிய நேரத்தில் ஆதரவு வழங்கப்படும். நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட உத்தரகாண்ட், சிக்கிம் மற்றும் இமாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங்களுக்கும் இதில் நிவாரணம் வழங்கப்படும்”
"சுற்றுலா எப்போதும் நமது நாகரிகத்தின் ஒரு பகுதி. இந்தியாவை ஒரு உலகளாவிய இலக்காக நிலைநிறுத்துவதற்கான எங்கள் முயற்சிகள், வேலை வாய்ப்புகளை உருவாக்கும் மற்றும் பிற துறைகளிலும் வாய்ப்புகளைத் திறக்கும்.
கயாவில் உள்ள விஷ்ணுபாத் கோயிலும், போத்கயாவில் உள்ள மகாபோதி கோயிலும் ஆன்மீக முக்கியத்துவம் வாய்ந்தவை என்று நான் முன்மொழிகிறேன். காசி விஸ்வநாத் கோயிலை, உலகத் தரம் வாய்ந்த சுற்றுலாத் தலமாக மாற்றும் வகையில் மேம்பாடுகள் செய்யப்பட உள்ளன.
ராஜ்கிர் மற்றும் நாலந்தாவிலும் (பீகார்) விரிவான வளர்ச்சி திட்டங்கள் மேற்கொள்ளப்படும். மேலும் ஒடிசாவில் இயற்கை அழகு, கோவில்கள், கைவினைத்திறன், இயற்கை நிலப்பரப்புகள், வனவிலங்கு சரணாலயங்கள் மற்றும் அழகிய கடற்கரைகள் ஆகியவற்றைக் கொண்ட சுற்றுலாத்தளங்களை உருவாக்குவோம்”
“அடுத்த பத்து ஆண்டுகளில் விண்வெளிப் பொருளாதாரத்தை 5 மடங்கு விரிவுபடுத்த ₹1,000 கோடி மூலதன நிதி ஒதுக்கப்படும்.
அடுத்த தலைமுறை சீர்திருத்தங்கள் மூலம் உயர் வளர்ச்சியை நிலைநிறுத்துவதற்கான மூலோபாயத்தை வரையறுக்க பொருளாதாரக் கொள்கை கட்டமைப்பை உருவாக்குவோம். இந்த சீர்திருத்தங்கள் நிலம், உழைப்பு மற்றும் மூலதனம் உட்பட அனைத்து உற்பத்தி காரணிகளையும் உள்ளடக்கும். இதற்கு மத்திய, மாநில அரசுகளின் ஒத்துழைப்பு தேவைப்படும்”
அடுத்த 5 ஆண்டுகளில் 4.1 கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்க 2 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதேபோல், வேலை வாய்ப்புகளை உருவாக்குவதற்காக, ரூ 1.48 கோடியை ஒதுக்கப்பட்டுள்ளது.
அடுத்த ஐந்தாண்டு காலத்தில் 20 லட்சம் இளைஞர்கள் திறன் பெறுவார்கள். மொத்தம் 1,000 தொழில்துறை பயிற்சி நிறுவனங்கள் மேம்படுத்தப்படும்.
அனைத்து அரசுத் துறைகளிலும் முதன்முறையாக பணியாற்ற வரும் அனைவருக்கும் ஒரு மாத ஊதியம் வழங்கப்படும். முதன்முறையாக வருபவர்களுக்கான ஊக்கத்தொகை நேரடி பயன் பரிமாற்றம் (DBT) மூலம் வழங்கப்படும்.
ஐந்தாண்டுகளில் ஒரு கோடி இளைஞர்களுக்கு 500 நிறுவனங்களில் வேலைவாய்ப்புகளை அரசு தொடங்கும்.
ஷ்ரம் சுவிதா மற்றும் சமாதான போர்ட்டல் தொழில் மற்றும் வர்த்தகத்திற்கான இணக்கத்தை எளிதாக்கும் வகையில் புதுப்பிக்கப்படும்.
கிராமப்புற நிலம் தொடர்பான நடவடிக்கைகளில் அனைத்து நிலங்களுக்கும் தனித்துவமான ஆதாரை வழங்குதல், நில வரைபடங்களை டிஜிட்டல் மயமாக்குதல், நிலங்களை ஆய்வு செய்தல் மற்றும் நிலப் பதிவேட்டை நிறுவுதல் ஆகியவற்றுக்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
சுங்கத்தைப் பொறுத்தவரை, 2022-23ல் சுங்க வரி விகிதங்களின் எண்ணிக்கையை குறைத்துள்ளோம். அடுத்த ஆறு மாதங்களில் மறுஆய்வுக்குப் பிறகு அவை சீராகும்.
புற்றுநோயாளிகளுக்கு நிவாரணம் வழங்குவதற்காக மேலும் மூன்று மருந்துகளுக்கு சுங்க வரியில் இருந்து முழுமையாக விலக்கு அளிக்கப்படும். போலவே உள்நாட்டு எக்ஸ்ரே இயந்திரங்களின் உற்பத்திக்கான எக்ஸ்ரே குழாய்கள் மற்றும் பிளாட் பேனல் டிடெக்டர்கள் மீதான அடிப்படை விலைக்கான சுங்க வரியில் மாற்றங்கள் கொண்டுவரப்படும்” என்றார்.
இந்த சுங்க வரி மாற்றத்தால், செல்ஃபோன்கள் விலை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பல முக்கிய அம்சங்களை உள்ளடக்கிய 2024-25-க்கான பட்ஜெட் சரியாக 12.30 மணியளவில் நிறைவடைந்துள்ளது. சரியாக 1 மணி நேரம் 30 நிமிடங்களில் பட்ஜெட் உரையை நிறைவு செய்தார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.
கீழ் இணைக்கப்பட்டுள்ள வீடியோவில், முழுமையாக அமைச்சர் பேசியவற்றை அறியலாம்..