எதிர்வரும் மத்திய பட்ஜெட்டில் சாமானியர்கள் எதிர்பார்க்கும் விஷயங்களில் வருமான வரிச் சலுகையே முதலிடம் பிடித்திருப்பதாக எகனாமிக் டைம்ஸ் ஆய்வில் தெரியவந்துள்ளது.
இணையதளம் வழியாக நடத்தப்பட்ட ஆய்வில், வருமான வரிச் சலுகையை அதிகரிக்க வேண்டும் என 53 சதவிகிதம் பேர் தெரிவித்துள்ளனர். எந்த துறைக்கு அதிக நிதி எதிர்பார்க்கிறீர்கள் என்ற கேள்விக்கு சுற்றுச்சூழல் பாதுகாப்பு என அதிகப்பட்சமாக 30 சதவிகிதம் பேர் கூறியுள்ளனர். கட்டமைப்பு என 26 சதவிகிதத்தினரும் விவசாயம் என 16 சதவிகிதத்தினரும் தெரிவித்துள்ளனர்.
பெண்கள், குழந்தைகள் பாதுகாப்புக்கு அதிக நிதி ஒதுக்க 11 சதவிகிதம் பேர் வலியுறுத்தியுள்ளனர். நுகர்வோர் நலனுக்கு என்ன செய்ய வேண்டும் என்ற கேள்விக்கு, வரியைக் குறைத்தால் போதும் என 28 சதவிகிதம் பேர் கூறியுள்ளனர். வரியைக் குறைப்பதுடன் ஊக்கச் சலுகை அளிக்க வேண்டுமென 29 சதவிகிதம் பேர் தெரிவித்துள்ளனர்.