நிர்மலா சீதாராமன் - திருமாவளவன் ட்விட்டர்
இந்தியா

மக்களவை | “முதலில் தமிழ்நாட்டுக்கு உபதேசம் செய்யுங்கள்”- திருமாவளவனுக்கு நிர்மலா சீதாராமன் பதில்!

PT WEB

தமிழ்நாட்டில் போதைப் பொருட்கள், மதுபானங்கள் பெருகி உள்ளதாக மக்களவையில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் குற்றம் சாட்டினார். இதனை கண்டித்து திமுக மற்றும் கூட்டணி கட்சி உறுப்பினர்கள் முழக்கங்களை எழுப்பினர்.

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்

மக்களவையில் பேசிய மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தமிழ்நாட்டில் கள்ளச்சாராயத்தால் 56க்கும் அதிகமான பேர் உயிரிழந்துள்ளனர் என்றார். இதனை கண்டித்த திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் முழக்கங்களை எழுப்பினர். இதனால் மக்களவையில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.

அப்போது மக்களவையில் பேசிய விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன், “போதை பொருட்களை தடைசெய்து, அவற்றை தடுத்து நிறுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

உடனடியாக நிர்மலா சீதாராமன், “மூத்த உறுப்பினரான திருமாவளவனின் நோக்கம் மிகவும் சிறப்பானது. அதை பாராட்டுவகிறேன். ஆனால் மத்திய அரசுக்கு உபதேசம் செய்யும் திருமாவளன் முதலில் தமிழக அரசுக்கு உபதேசம் செய்ய வேண்டும்” என வலியுறுத்தினார்.