இந்தியா

பிரம்மபுத்ரா நதியில் வெள்ளப்பெருக்கு - இயல்பு வாழ்க்கை பாதிப்பு

பிரம்மபுத்ரா நதியில் வெள்ளப்பெருக்கு - இயல்பு வாழ்க்கை பாதிப்பு

webteam

அசாமில் பெய்துவரும் கனமழை காரணமாக பிரம்மபுத்ரா நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. 

வடகிழக்கு மாநிலங்களில் பருவ மழை தீவிரம் அடைந்துள்ளது. இதனையடுத்து அசாம், மிசோரம், மேகாலயா உள்ளிட்ட மாநிலங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. எனவே அங்குள்ள பல பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிவருகிறது. 

இந்நிலையில் நிமாதி மலைப்பகுதியில் பாயும் பிரம்மபுத்ரா நதியில் நீர் ஆக்ரோஷமாக பாய்ந்தோடுகிறது. திமாஜி, லக்ஷ்மிபூர் உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களில் வெள்ளநீர் புகுந்ததில் அப்பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த ஐந்து மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இப்பகுதிகளில் அசாம் மாநில பேரிடர் மீட்புக்குழுவினர் தொடர் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.