இந்தியா

விமானக் கட்டணம் உயர வாய்ப்பு : ஸ்பைஸ்ஜெட் சூசகம்

விமானக் கட்டணம் உயர வாய்ப்பு : ஸ்பைஸ்ஜெட் சூசகம்

webteam

எரிபொருள் விலை கடும் உயர்வால் விமானப் பயண கட்டணங்கள் 10 முதல் 15 சதவிகிதம் வரை உயரக்கூடும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

இந்திய விமான நிறுவனங்கள் கடும் நிதி நெருக்கடியில் உள்ளதாகவும் இதனால் கட்டணம் உயர்த்துவது அவசியமாக உள்ளதாகவும் ஸ்பைஸ்ஜெட் தலைவர் அஜய் சிங் தெரிவித்துள்ளார். கச்சா எண்ணெய் விலை உயர்வு, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு உயர்வு ஆகியவற்றால் விமான எரிபொருள் விலை கணிசமாக அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ள அவர், இது தவிர வரி விதிப்பும் தங்கள் துறையை பாதித்துள்ளதாக தெரிவித்தார்.

இந்தியாவின் முன்னணி விமான நிறுவனமான ஜெட் ஏர்வேஸ் கடனில் சிக்கியுள்ளது. கடந்த காலாண்டில் இந்நிறுவனம் ஆயிரத்து 323 கோடி ரூபாய் நஷ்டத்தை பதிவு செய்துள்ளது. இதே போல ஏர் இந்தியா நிறுவனமும் பெரும் நஷ்டத்திலிருந்து மீள முடியாமல் தவித்து வருகிறது. அந்நிறுவனத்தின் பெரும்பகுதி பங்குகளை விற்கும் அரசின் திட்டமும் தோல்வியடைந்துள்ளது