Cake கோப்பு புகைப்படம்
இந்தியா

கர்நாடகா: கேக் சாப்பிட்ட 5 வயது சிறுவன் உயிரிழப்பு – பெற்றோருக்கு தீவிர சிகிச்சை

கர்நாடகாவில் கேக் சாப்பிட்ட 5 வயது சிறுவன் உயிரிழந்த நிலையில், பெற்றோருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

PT WEB

செய்தியாளர்: ம.ஜெகன்நாத்

கர்நாடக மாநிலம் பெங்களூரு கே.பி. அக்ரஹாரா புவனேஸ்வரி நகரைச் சேர்ந்தவர்கள் பால்ராஜ் - நாகலட்சுமி தம்பதியர். இவர்களுக்கு தீரஜ் என்ற 5 வயது மகன் உள்ளார். ஸ்விக்கியில் உணவு விற்பனை பிரதிநிதியாக வேலை செய்து வரும் பால்ராஜிடம் யாரோ ஒருவர், ஸ்விக்கி மூலம் கேக் ஆர்டர் செய்திருந்தார். இதையடுத்து பேக்கரிக்கு சென்ற பால்ராஜ் கேக் வாங்கியுள்ளார்.

கேக் சாப்பிட்ட 5 வயது சிறுவன் உயிரிழப்பு

இந்நிலையில், கேக் ஆர்டர் செய்த நபர், திடீரென ஆர்டரை ரத்து செய்துள்ளார். இதனால், பேக்கரியில் வாங்கிய கேக்கை, பால்ராஜ் தனது வீட்டிற்கு எடுத்துச் சென்று தனது மகன், மனைவியுடன் சேர்ந்து சாப்பிட்டுள்ளார். இதையடுத்து மூன்று பேருக்கும் உடல்நலக் குறைவு ஏற்பட்ட நிலையில், அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக, கிம்ஸ் மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு சிகிச்சை பெற்று வந்த சிறுவன் தீரஜ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான். பால்ராஜ், நாகலட்சுமி ஆகிய இருவரும் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதைத் தொடர்ந்து போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், விஷமாக மாறிய கேக்கை சாப்பிட்டதால் தீரஜ் உயிரிழந்தது தெரிய வந்துள்ளது. இந்த சம்பவம் அந்தப் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.