இந்தியா

5 மாநில சட்டப்பேரவை தேர்தல் தேதி அறிவிப்பு: நடத்தை விதிகள் இன்றே அமல்

5 மாநில சட்டப்பேரவை தேர்தல் தேதி அறிவிப்பு: நடத்தை விதிகள் இன்றே அமல்

Rasus

தெலங்கானா உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோரம் மற்றும் தெலங்கானா ஆகிய மாநிலங்களின் சட்டப்பேரவை தேர்தல் தேதியை தலைமை தேர்தல் ஆணையர் இன்று அறிவித்தார். டெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய தலைமை தேர்தல் ஆணையர் ஓம் பிரகாஷ் ராவத், டிசம்பர் 15-க்குள் 5 மாநிலத்திற்கும் தேர்தல் நடத்தி முடிக்கப்படும் எனக் கூறினார். 5 மாநிலங்களிலும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வருவததாக கூறிய அவர், 5 மாநில தேர்தலிலும் யாருக்கு வாக்களித்தோம் என்பதை அந்துகொள்ளும் ஒப்புகைச் சீட்டு வாக்குப்பதிவு எந்திரம் பயன்படுத்தப்படும் எனவும் கூறினார்.

அதன்படி சத்தீஸ்கர் மாநிலத்திற்கு இரண்டு கட்டமாக தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

முதல் கட்ட தேர்தல்- நவம்பர் 12
2-ஆம் கட்ட தேர்தல்- நவம்பர் 20

மத்தியப் பிரதேசம், மிசோரம் மாநிலங்களுக்கு ஒரே கட்டமாக நவம்பர் 28-ஆம் தேதி தேர்தல் நடைபெறம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ராஜஸ்தான் மற்றும் தெலங்கானா மாநிலங்களுக்கு ஒரே கட்டமாக டிசம்பர் 7-ஆம் தேதி தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

5 மாநில தேர்தல்களில் பதிவாகும் வாக்குகள் அனைத்தும் டிசம்பர் 11ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படும் எனவும் தலைமைத் தேர்தல் ஆணையர் ஓம் பிரகாஷ் ராவத் அறிவித்துள்ளார்.