ஹீரலால் ஷர்மா எக்ஸ் தளம்
இந்தியா

டெல்லி| ஒரே வீட்டில் 5 சடலங்கள்.. போலீஸ் விசாரணை!

டெல்லியில் 5 பேர் பூட்டிய வீட்டுக்குள் பிணமாய்க் கிடந்த சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

Prakash J

டெல்லி ரங்புரியில் உள்ள குடியிருப்பில் ஹீரலால் ஷர்மா (46) என்பவர், நீது (26), நிக்கி (24), நீரு (23) மற்றும் நிதி (20) என தனது 4 மகள்களுடன் வசித்து வந்தார். இதில் இரண்டு மகள்கள் மாற்றுத்திறனாளிகள். இவருடைய மனைவி, ஓராண்டுக்கு முன்பு புற்றுநோய் காரணமாக உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த செப்டம்பர் 24-ஆம் தேதி, ஹீரலால் ஷர்மா வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியுள்ளது. இதையடுத்து அக்கம்பக்கத்தினர் அவரது வீட்டுக் கதவைத் தட்டியுள்ளனர். ஆனால், கதவு திறக்கப்படவில்லை.

சடலம்

இதையடுத்து அவர்கள் குடியிருப்பு உரிமையாளரிடம் தகவல் சொல்ல, அவர் போலீஸுக்கு தகவல் தெரிவித்துள்ளார். அதன்பேரில் விரைந்து வந்த போலீஸார், கதவை உடைத்து பார்த்தபோது வீட்டிற்குள் 5 பேர் சடலங்களாக கிடந்துள்ளனர்.

முதற்கட்ட விசாரணையில் அவர்களின் உடலில் எந்தவித காயங்களும் இல்லை எனத் தெரிய வந்துள்ளது. தவிர, மூன்று விஷம் கலந்த பொட்டலங்களும் 5 கண்ணாடி கோப்பைகளும் 1 ஸ்பூனும் கிடந்ததாக தெரிவித்துள்ளனர். இதையடுத்து அவர்கள் விஷம் குடித்து தற்கொலை செய்திருகலாம் என போலீஸார் தெரிவித்துள்ளனர்.

ஹீரலால் ஷர்மா முதலில் தனது மகள்களுக்கு விஷத்தைக் கொடுத்து கொன்றுவிட்டு, பின்னர் அவர் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என போலீஸார் தெரிவித்துள்ளனர்.