tunnal image pt desk
இந்தியா

‘சுரங்கத்தில் சிக்கியவர்கள் உள்ளே என்ன செய்கிறார்கள்..?’ வெளியான முதல் வீடியோ! #Video

உத்தராகண்ட் மாநிலம் சில்கியாராவில் மலையைக் குடைந்து அமைக்கப்பட்டு வரும் சுரங்கப் பாதையில் நேரிட்ட விபத்தில் சிக்கியுள்ள 41 தொழிலாளர்களை மீட்கும் பணி மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில், சுரங்கப்பாதையில் சிக்கியுள்ளவர்களின் வீடியோ வெளியாகியுள்ளது.

webteam

உத்தராகண்ட் மாநிலம் சில்க்யாராவில் சுரங்கப் பாதைக்குள் சிக்கியுள்ள தொழிலாளர்களை மீட்கும் முயற்சியில் ஒரு முக்கிய திருப்புமுனையாக, இடிபாடுகளுக்கிடையே 6 அங்குல விட்டமுள்ள குழாயை உள்ளே செலுத்துவதில் மீட்பு குழுவினர் வெற்றி கண்டுள்ளனர். இந்த குழாயை உள்ளே செலுத்தியதன் மூலம் உள்ளே சிக்கிக் கொண்டுள்ள 41 தொழிலாளர்களுக்கும் திட உணவுகளை அனுப்ப முடியும்.

uttarakhand tunnel collapse

முன்னதாக ஒரு நான்கு அங்குல குழாய் மூலம் ஆக்சிஜன், உலர் பழங்கள், மருந்துகள் போன்றவை அனுப்பப்பட்டு வந்தன. தற்போது 6 அங்குல குழாய் உள்ளே செலுத்தப்பட்டுள்ளது மீட்புப் பணியில் முதல் முக்கிய திருப்புமுனை என தேசிய நெடுஞ்சாலை மற்றும் கட்டமைப்பு மேம்பாட்டு நிறுவனத்தின் இயக்குநர் அன்ஷ§ மணீஷ் கல்கோ தெரிவித்தார். இந்த குழாய் சுமார் 53 மீட்டருக்கு உள்ளே செலுத்தப்பட்டுள்ளது. உள்ளே சிக்கியுள்ள தொழிலாளர்களால் தங்களது குரலை கேட்க முடிகிறது என மீட்புப் படையினர் தெரிவித்தனர்.

இந்நிலையில், சுரங்கப்பாதையில் சிக்கியுள்ள தொழிலாளர்களின் வீடியோ தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதில், மீட்புக் குழுவினருடன் தொழிலாளர்கள் வாக்கி டாக்கியில் பேசும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. அந்த வீடியோவை, கீழுள்ள இணைப்பில் காணலாம்.