மும்பையின் தாராவி பகுதியில் கடந்த ஏப்ரல் 1ஆம் தேதியிலிருந்து, முதன் முறையாக இன்று ஒருவர்கூட கொரோனாவால் பாதிக்கப்படவில்லை.
மும்பையில் குடிசைப்பகுதிகள் அதிகம் நிறைந்துள்ள தாராவி பகுதியில் கடந்த 24 மணி நேரத்தில் ஒரு கொரோனா வைரஸ் தொற்றுகூட பதிவாகவில்லை என்று சுகாதார அதிகாரி ஒருவர் இன்று மாலை தெரிவித்தார். உலகின் அடர்த்தியான நகர்ப்புற குடியேற்றங்களில் ஒன்றான இப்பகுதியில், கொரோனா வைரஸ் கண்டறியப்பட்ட ஏப்ரல் 1ஆம் தேதி முதல், முதன்முறையாக இன்று புதிய கோவிட்-19 வழக்கு எதுவும் கண்டறியப்படவில்லை.
தாராவியில் இதுவரை 3,788 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் சிகிச்சையில் உள்ள நோயாளிகளின் எண்ணிக்கை 12, அவர்களில் எட்டு பேர் வீட்டு தனிமையிலும், நான்குபேர் கோவிட்-19 பராமரிப்பு மையத்திலும் சிகிச்சையில் உள்ளனர் என்று சுகாதார அதிகாரி தெரிவித்தார். 2.5 சதுர கிலோமீட்டரில் அமைந்துள்ள தாராவி காலனிகளில் 6.5 லட்சம் மக்கள் வசிக்கின்றனர்.