இந்தியா

கேரளாவில் இன்று முதல் முழு ஊரடங்கு அமல்!

கேரளாவில் இன்று முதல் முழு ஊரடங்கு அமல்!

JustinDurai

கேரளாவில் இன்று முதல் கடும் கட்டுப்பாடுகளுடனான ஊரடங்கு துவங்கியது. இதன் காரணமாக தமிழக கேரள எல்லைப்பகுதிகளில் கேரள காவல்துறை கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளது.

கேரளாவில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருகிறது. இது காரணமாக கேரளாவில் சனி மற்றும் ஞாற்றுக்கிழமை நாட்களில் முழு ஊரடங்குகு சமமான கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்தி வருகிறது. இந்த நிலையில் கொரோனா பரவல் மேலும் நாளுக்கு நாள் அதிகரித்தே வருகிறது. இதனால் கேரள அரசு நாளை முதல் 9 நாட்கள் கடும் கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்த துவங்கியது.

இதன்படி இன்று முதல் கேரளாவில் அத்தியாவசிய தேவைகளுக்கான மளிகை கடைகள், காய்கறி கடைகள் மட்டுமே செயல்படும். உணவகங்களில் பார்சல் மட்டுமே வழங்கவேண்டும், பொதுமக்கள் தேவை இல்லாமல் பொது இடங்களில் இறங்கினால் காவல் துறை அபராதம் விதிக்கப்படும், பொதுமக்கள் அத்தியாவசிய தேவைகளுக்காக தூரமான பகுதிகளுக்கு செல்லவேண்டிய இருந்தால் அரசு பேருந்துகளில் பயணம் செய்யவேண்டும். இதற்கான முறையான ஆவணங்களுடன் சென்றால் மட்டுமே அனுமதி வழங்கப்படும். திருமணம் மற்றும் புது வீடு பால் காய்ச்சும் நிகழ்ச்சியில் 50 பேருக்கு மட்டுமே கலந்துகொள்ள அனுமதி உள்ளது. இதுபோல் இறந்த பிறகு நடைபெறும் இறுதி சடங்கு நிகழ்ச்சியில் 25 நபர்களுக்கு மட்டுமே கலந்துகொள்ள முடியும்.

இதுபோல் அரசு அலுவலகங்களில் அத்தியாவசிய துறைகள் மட்டுமே செயல்படும். அத்தியாவசிய தேவைகளுக்கு வெளியே செல்லும் நபர்கள் அடையாள அட்டையுடன் செல்லவேண்டும். இதுபோல் தமிழக கேரள எல்லை பகுதிகளில் காவல் துறை கண்காணிப்பை தீவிரப் படுத்தி தமிழகத்தில் இருந்து கேரளாவில் செல்வதை கண்காணிக்க சோதனையை தீவிரப்படுத்தி உள்ளது. இந்த கட்டுப்பாடுகளை ஒரு வாரக்காலம் கண்காணித்து தொற்று பரவல் குறையவில்லை என்றால் கேரளாவில் தொடர்ந்து முழு முடக்கத்தை தொடரும் என கூறப்படுகிறது.