இந்தியா

ராஜஸ்தானில் கொரோனாவுக்கு முதல் உயிரிழப்பு

ராஜஸ்தானில் கொரோனாவுக்கு முதல் உயிரிழப்பு

webteam

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் அச்சுறுத்தி வரும் நிலையில் ராஜஸ்தான் மாநிலத்தில் கொரோனாவுக்கு முதல் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது.

கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை நேற்று உலகம் முழுவதும் 22 ஆயிரமாக இருந்த நிலையில், இன்று 24 ஆயிரமாக அதிகரித்துள்ளது. அதாவது 24,065 பேர் இதுவரை உலகம் முழுவதும் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர். உலகளவில் 199 நாடுகளுக்கு கொரோனா பரவிய நிலையில் பாதிப்பு எண்ணிக்கை 5,31,609 ஆக உயர்ந்துள்ளது. உலகம் உழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 1,23,391 பேர் குணமடைந்துள்ளனர்.

கொரோனா உயிரிழப்பில் இத்தாலி முதலிடத்திலும் ஸ்பெயின் 2வது இடத்திலும், சீனா 3வது இடத்திலும், அமெரிக்கா 4வது இடத்திலும் உள்ளது. இத்தாலியில் 8,215, ஸ்பெயினில் 4,365, சீனாவில் 3,287, அமெரிக்காவில் 1,293 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர். இந்தியாவை பொருத்தவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 16bஆக உள்ளது. பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 633 ஆக உள்ளது. சிகிச்சைப் பெற்று குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 44ஆக உள்ளது.

இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலத்திலும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இது ராஜஸ்தானில் கொரோனாவுக்கு ஏற்பட்ட முதல் உயிரிழப்பு ஆகும். பில்வாரா மருத்துவமனையில் இறந்த நபருக்கு ரத்த அழுத்தமும், சிறுநீரக பிரச்னைகள் இருந்ததாக மருத்துவர்கள் தகவல் தெரிவிக்கின்றனர்.