இந்தியா

தொடங்கியது அமர்நாத் யாத்திரை - பாதுகாப்பு பணியில் 40 ஆயிரம் வீரர்கள்

தொடங்கியது அமர்நாத் யாத்திரை - பாதுகாப்பு பணியில் 40 ஆயிரம் வீரர்கள்

rajakannan

காஷ்மீரில் அமர்நாத் யாத்திரைக்கான முதல் கட்ட பயணம் பலத்த பாதுகாப்புடன் தொடங்கியுள்ளது.

காஷ்மீர் மாநிலம், அமர்நாத் குகை கோயிலில் தோன்றும் பனி லிங்கத்தை தரிசிக்க ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் புனித யாத்திரை மேற்கொள்கின்றனர். இந்த வரும் ஒரு லட்சத்து 60 ஆயிரம் பேர் அமர்நாத் பயணத்திற்காக பதிவு செய்திருந்தனர். இவர்கள் பல்வேறு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு குழுவாக அனுப்பி வைக்கப்படுவார்கள். 

உள்துறை அமைச்சர் அமித்ஷா தன்னுடைய ஜம்மு - காஷ்மீர் பயணத்தின் போது அமர்நாத் யாத்திரைக்கான பாதுகாப்பு பணிகளை பார்வையிட்டிருந்தார். சுமார் 40 ஆயிரம் பாதுகாப்பு படை வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், அமர்நாத் யாத்திரைக்காக முதல் பிரிவு மக்கள் தங்கள் பயணத்தை நேற்று தொடங்கினர். காஷ்மீர் பள்ளத்தாக்கில் உள்ள பஹல்காம் மற்றும் பல்தால் முகாம்கள் வழியாக பக்தர்கள் பயணம் மேற்கொண்டுள்ளானர். 

“இது மிகவும் அமைதியான யாத்திரை ஆக இருக்கும். அடுத்த ஆண்டு முதல் பாதுகாப்பில் எவ்வித கவலையும் இருக்காது” என்று மத்திய இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் கூறியுள்ளார்.