ஆந்திராவின் ஏலூரில், சாக்குப்பையில் பட்டாசுகளை எடுத்துக்கொண்டு இருசக்கர வாகனத்தில் இருவர் சென்று கொண்டிருந்தனர். அப்போது சாலையில் இருந்த பள்ளத்தில் அந்த இரு சக்கர வாகனம் நிலை தடுமாறி விழுந்தது.
சாக்குப் பையில் வெங்காய வெடி இருந்ததாக கூறப்படும் நிலையில், வெங்காய வெடி வெடித்த நிலையில் எடுத்துச் செல்லப்பட்ட மொத்தப் பட்டாசுகளும் வெடித்துச் சிதறின.
இருசக்கர வாகனத்தில் இருவர் சென்ற நிலையில், ஒருவர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். சம்பவத்தின்போது அருகே நின்றிருந்த 5 பேர் மற்றும் இருசக்கர வாகனத்தில் வந்த மற்றொருவர் என காயமடைந்த 6 நபர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.