இந்தியா

'லோ பேலன்ஸ்' வாடிக்கையாளர் கணக்கில் இருந்து ரூ.10,000 கோடி அபராதம் வசூல் !

'லோ பேலன்ஸ்' வாடிக்கையாளர் கணக்கில் இருந்து ரூ.10,000 கோடி அபராதம் வசூல் !

webteam

நாடு முழுவதும் குறைந்தபட்ச இருப்புத் தொகையை வைத்திருக்காத வங்கிக் கணக்குகளிலிருந்து ரூ.10,000 கோடி அபராதம் வசூல் என நிதித்துறை இணையமைச்சர் சிவ் பிரதாப் சுக்லா தெரிவித்துள்ளார்.

நாடெங்கும் உள்ள வங்கிக் கணக்கில் குறைந்தபட்ச தொகையை இருப்பு வைத்திருக்காத வாடிக்கையாளர்களிடம் இருந்து பொதுத்துறை வங்கிகள் கடந்த மூன்றரை ஆண்டுகளில் 10 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் மேல் அபராதம் வசூலித்திருப்பதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன. இதுதொடர்பான விவரங்களை நேற்று மக்களவையில் மத்திய நிதித்துறை இணையமைச்சர் சிவ் பிரதாப் சுக்லா தெரிவித்துள்ளார். 

இந்த நிதியாண்டின் முதல் 6 மாதங்களில் மட்டும் பொதுத்துறை வங்கிகளில் குறைந்தபட்ச இருப்புத் தொகையை வைத்திருக்காத பொதுமக்களின் கணக்குகளிலிருந்து ஆயிரம் கோடி ரூபாய் வசூலிக்கப்பட்டிருக்கிறது. இதுதவிர, அனுமதியளிக்கப்பட்ட அளவைத் தாண்டி பொதுமக்கள் தாங்கள் வைத்திருக்கும் வங்கியின் ஏடிஎம்மை பயன்படுத்தா‌மல் வேறு வங்கிகளின் ஏடிஎம்மை பயன்படுத்தியதாக மூன்றரை ஆண்டுகளில் 850 கோடி ரூபாய்க்கும் மேல் அபராதம் வசூலிக்கப்பட்டிருப்பதாகவும் நிதித்துறை இணையமைச்சர் சிவ் பிரதாப் சுக்லா தெரிவித்துள்ளார்.