இந்தியா

“முகாம்கள் மூலம் பொதுமக்களுக்கு 9 நாட்களில் 81 ஆயிரம் கோடி கடன்” - நிதித்துறை செயலாளர்

“முகாம்கள் மூலம் பொதுமக்களுக்கு 9 நாட்களில் 81 ஆயிரம் கோடி கடன்” - நிதித்துறை செயலாளர்

webteam

முகாம்கள் மூலம் 9 நாட்களில் பொதுமக்களுக்கு 81,781 கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. 

தீபாவளியையொட்டி பண்டிகை செலவு, வீடு வாங்குதல் போன்றவற்றுக்கு கடன் வழங்க முகாம்கள் நடத்துமாறு பொதுத்துறை வங்கிகளுக்கு அறிவுறுத்தப்பட்டிருப்பதாக கடந்த செப்டம்பர் மாதத்தில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்திருந்தார். 

அதன்படி, இந்தியா முழுவதும் சுமார் 400 மாவட்டங்களில் கடன் முகாம்கள் நடத்த பொதுத்துறை வங்கிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.  இந்தத் திட்டத்தின் மூலம் பொதுத்துறை வங்கிகள் மூலம் இம்மாதம் முதல் தேதியில் இருந்து 9ஆம் தேதி வரை 81 ஆயிரத்து 781 கோடி ரூபாய் அளவுக்கு பொதுமக்களுக்கு கடன்கள் வழங்கப்பட்டுள்ளதாக நிதித்துறை செயலாளர் ராஜீவ் குமார் தெரிவித்துள்ளார். 

இந்தத் தொகையில் 34 ஆயிரத்து 342 கோடி ரூபாய்க்கு புதிய நபர்களுக்கு கடன் அளிக்கப்பட்டிருப்பதாக ராஜீவ் குமார் தெரிவித்துள்ளார்.