தேர்தல் பத்திரத் திட்டத்தை மீண்டும் கொண்டுவருவோம் என தெரிவித்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது.
அரசியல் கட்சியினருக்கு நன்கொடை வழங்கும் தேர்தல் பத்திரங்களில் வெளிப்படைத்தன்மை எனக்கூறி அத்திட்டத்தை உச்சநீதிமன்றம் ரத்து செய்திருந்தது.
இதனிடையே, கடந்த வெள்ளியன்று செய்தியாளர்களிடம் பேசிய நிர்மலா சீதாராமன், "தேர்தல் பத்திரங்கள் கருப்புப் பணத்தை ஒழிப்பதற்கான நடவடிக்கையே .பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால், தகுந்த ஆலோசனைக்குப் பிறகு வேறொரு வடிவில் தேர்தல் பத்திரங்களை கொண்டு வருவோம் ."என்று தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்டுள்ள எக்ஸ் பதில்,
”பாஜக கொள்ளையடிப்பதை தொடர விரும்புவது இதன் மூலம் நிரூபணம் ஆகியுள்ளது. 4 லட்சம் கோடி ரூபாய் வரை பாஜக கொள்ளை அடித்திருக்கிறது. நல்லவேளையாக பாஜக மீண்டும் ஆட்சிக்கு வராது என்பது களநிலவரங்களில் தெரியவந்துள்ளது.” என்று விமர்சனம் செய்துள்ளார்.