இந்தியா

100 நாள் திட்டம், சுகாதாரத்துறைக்கு கூடுதல் நிதி - நிர்மலா சீதாராமன்

100 நாள் திட்டம், சுகாதாரத்துறைக்கு கூடுதல் நிதி - நிர்மலா சீதாராமன்

webteam

பிரதமர் அறிவித்த சுயசார்பு இந்தியா திட்டத்தின் இறுதி கட்ட அறிவிப்பில் 7 அறிவிப்புகளை நிர்மலா சீதாராமன் வாசித்து வருகிறார்.

அப்போது பேசிய அவர், “கொரோனாவை கட்டுப்படுத்த மாநிலங்களுக்கு ரூ. 4,113 கோடி ஏற்கெனவே வழங்கப்பட்டுள்ளது. 8.19 விவசாயிகளுக்கு தலா ரூ. 2000 நேரடியாக வங்கி கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்த ஏற்கெனவே 15 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கான உபகரணங்களை வாங்க ரூ. 3,750 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் 11.08 கோடி ஹைட்ராக்ஸிக்ளோர்குயின் மாத்திரைகள் தயாரிக்கப்பட்டுள்ளன. கொரோனா காலத்தில் ஆன்லைனில் புதிதாக 200 மின்னனு பாடப்புத்தகங்கள் வெளியிடப்பட்டுள்ளன. பள்ளிக் கல்விக்காக ஏற்கெனவே 3 தொலைக்காட்சி அலைவரிசையில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. மேலும் 12 அலைவரிசைகள் சேர்க்கப்பட்டுள்ளன.

ஆசிரியர்கள் மாணவர்கள் இடையேயான் உரையாடல் புதிய தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்படும். கொரோனா தொடர்பான ஆய்வகங்களை அமைக்க ரூ. 550 கோடி செலவிடப்பட்டுள்ளது. PPE எனப்படும் பாதுகாப்பு கவச உடைகளை தயாரிக்கும் 300 நிறுவனங்கள் இந்தியாவில் தொடங்கப்பட்டுள்ளன. இந்தியாவில் 87 லட்சம் N95 முகக் கவசங்கள் தயாரிக்கப்பட்டு விநியோகிக்கப்பட்டுள்ளன. 100 நாள் வேலைத்திட்டத்துக்கு கூடுதலாக ரூ. 40 ஆயிரம் கோடி ஒதுக்கப்படுகிறது. மொத்தம் 100 நாள் வேலைத்திட்டத்துக்கான பட்ஜெட் ஒதுக்கீடு ரூ. 61,000 கோடி. பொது சுகாதாரத்துறைக்கு கூடுதல் நிதி ஒதுக்கப்படும். நாட்டின் ஒவ்வொரு மாவட்டத்திலும் தொற்று நோய் தடுப்பு மருத்துவமனைகள் அமைக்கப்படும். ஒரே நாடு ஒரே டிஜிட்டல் பிளாட்பார்ம் அமைக்கப்படும். ஒவ்வொரு வகுப்புக்கும் டிவி சேனல் தொடங்கப்படும். மாற்று திறனாளிகளுக்கு சிறப்பு பாடத்திட்டம் தொடங்கப்படும். ஆன்லைன் கல்வியை ஊக்குவிக்கும் வகையில் இ-வித்யா என்ற புதிய திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை ஒவ்வொரு வகுப்பிற்கும் ஒரு டிவி சேனல் தொடங்கப்படும். ஆன்லைன் படிப்புகளை தொடங்குவதற்கு 100 பல்கலைக்கழகங்களுக்கு அனுமதி வழங்பட்டுள்ளது.” எனத் தெரிவித்தார்.