உலகின் 5வது பெரிய பொருளாதாரம் கொண்ட நாடாக இந்தியா உருவெடுக்கும் என மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்.
உலகின் 5வது பெரிய பொருளாதாரம் கொண்ட நாடாக இந்தியா உருவெடுக்கும் என்றும் தற்போது உலக பொருளாதாரத்தில் 5வது பெரிய நாடாக பிரிட்டன் திகழ்வதாகவும் அந்நாட்டை பின்னுக்குத் தள்ளி இந்தியா அந்த இடத்தை அடுத்தாண்டு எட்டும் என எதிர்பார்ப்பதாகவும் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார். மேலும் நடப்பாண்டில் பிரான்சை முந்தி இந்தியா 6வது இடத்தை எட்டியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். அடுத்த 10 முதல் 20 ஆண்டுகளில் உலகின் முன்னணி 3 பொருளாதார நாடுகளில் ஒன்றாக இந்தியா உருவெடுக்கும் என்றும் அவர் தெரிவித்தார். தற்போதைய நிலையில் பிற நாடுகளின் பொருளாதார வளர்ச்சியை விட இந்தியா முன்னணியில் உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.