இந்தியா

"பல்கலைக்கழக இறுதி ஆண்டு செமஸ்டர் தேர்வுகளை ரத்து செய்யுங்கள்" யூஜிசி பரிந்துரை

"பல்கலைக்கழக இறுதி ஆண்டு செமஸ்டர் தேர்வுகளை ரத்து செய்யுங்கள்" யூஜிசி பரிந்துரை

jagadeesh

பல்கலைக்கழகங்களில் இறுதி ஆண்டு செமஸ்டர் தேர்வுகளை ரத்து செய்யுமாறு யூஜிசி பரிந்துரை செய்துள்ளது. இந்தியாவில் முழுவதும் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வரும் சூழ்நிலையில் இத்தகைய பரிந்துரையை யூஜிசி செய்துள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் வேகமாக பரவி வருகிறது. கடந்த மார்ச் மாதம் இறுதியில் இருந்து பல்வேறு கட்டங்களாக பொது முடக்கம் அறிவிக்கப்பட்டு நடைமுறையில் இருந்து வருகிறது. மேலும் இப்போது பல்வேறு மாநிலங்களில் தளர்வுகளுடன் கூடிய பொது முடக்கம் அமலில் இருக்கிறது.

இதன் காரணமாக பல்வேறு மாநிலங்களில் ஏற்கெனவே பள்ளி மாணவர்களுக்கான பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கூட 10 ஆம் வகுப்பு மாணவர்கள் தேர்வின்றி தேர்ச்சி பெறுவார்கள் என மாநில அரசு அறிவித்தது. இந்நிலையில் பல்கலைக்கழகங்களில் இறுதி ஆண்டுக்கான செமஸ்டர் தேர்வுகளை ரத்து செய்யுமாறு யூஜிசி பரிந்துரைத்துள்ளது. ஹரியானா மாநில பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் தலைமையிலான நிபுணர் குழு இதனை மத்திய அரசுக்கு பரிந்துரைத்துள்ளது.