இந்தியா

பாஜகவுக்கு தாவிய காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்

பாஜகவுக்கு தாவிய காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்

webteam

கோவாவில் கூட்டணி சேர்ந்து பாஜக ஆட்சி அமைத்துள்ளது. அம்மாநில முதல்வர் மனோகர் பாரிக்கர் உடல்நிலை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனை பயன்படுத்தி, ஆட்சி அமைக்க முடியும் என்ற நம்பிக்கையில், காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினர். 

கோவா மாநில காங்கிரஸ் தலைவர் கூறும் போது “தனிப்பெரும் கட்சியாக உள்ள காங்கிரசுக்கு அழைப்பு விடுக்காமல், பாஜகவுக்கு ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்தது தவறு என்பதாலும், ஆட்சி அமைக்க போதுமான இடங்கள் காங்கிரஸ் பக்கம் உள்ளதாலும் எங்களுக்கு ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்க வேண்டும்” என தெரிவித்தார்.

காங்கிரஸின் கோரிக்கை தொடர்பாக ஆளுநர் முடிவெடுக்காவிட்டாலும், தொடர்ந்து ஆட்சி அமைப்பதற்கான நடவடிக்கைகளில் காங்கிரஸ் ஈடுபட்டு வந்தது. ஆனால் தற்போது நடந்துள்ள விஷயம் காங்கிரஸ் எதிர்பார்க்காத ஒன்றாக அமைந்திருக்கிறது. காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 2 எம்.எல்.ஏ.க்கள் பாஜக தலைவர் அமித்ஷாவை சந்தித்து தங்களை பாஜகவில் இணைத்துக் கொள்ள உள்ளனர். இன்று மாலை அவர்கள் அதிகாரப்பூர்வமாக பாஜகவில் இணைகிறார்கள்

செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் எம்.எல்.ஏ சுபாஷ், “எங்களோடு சேர்ந்து இன்னும் சிலரும் வரும் நாட்களில் பாஜகவில் இணைவார்கள்” என தெரிவித்துள்ளார். எம்.எல்.ஏ.க்களின் இந்த திடீர் முடிவு காங்கிரஸ் கட்சிக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.