இந்தியா

அமலுக்கு வந்தது ஃபாஸ்ட் டேக் முறை

அமலுக்கு வந்தது ஃபாஸ்ட் டேக் முறை

rajakannan

சுங்கச் சாவடியில் ரொக்கப் பணம் செலுத்தி, பயணத்தில் தாமதமாவதைத் தவிர்க்கும் வகையில் ஃபாஸ்ட் டேக் என்ற நடைமுறை அமலுக்கு வந்துள்ளது. 

நெடுஞ்சாலைச் சுங்கச்சாவடிகளிலும் மின்னணு முறையில் கட்டண வசூலை மேற்கொள்வது என்று மத்திய அரசு முடிவு செய்தது. அந்த வகையில், நாட்டில் உள்ள அனைத்து தேசிய நெடுஞ்சாலைகளிலும் ஃபாஸ்ட் டேக் என்ற மின்னணுக் கட்டண வசூல் நடைமுறை டிசம்பர் ஒன்றாம் தேதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. 

இதன்படி, டிசம்பர் ஒன்றாம் தேதிக்குப் பிறகு விற்பனை செய்யப்படும் நான்கு சக்கர மற்றும் அதற்கு மேற்பட்ட வாகனங்களில் ஃபாஸ்ட் டேக்  கருவி பொருத்தப்படுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதிகபட்சம் 200 ரூபாய்க்கு கிடைக்கும். இந்த ஃபாஸ்ட் டேக்கை தற்போதுள்ள தங்கள் வாகனங்களில் உரிமையாளர்கள் பொருத்தலாம்.

இந்த நடைமுறை அமலுக்கு வந்துள்ளதால், சுங்கச்சாவடிகளில் மணிக்கணக்கில் வாகனங்கள் காத்திருக்க வேண்டிய அவசியம் ஏற்படாது என்றும் வாகனங்களில் எரிபொருள்கள் வீணாவதும் தடுக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.