இந்தியா

ஃபரூக் அப்துல்லாவின் வீட்டுக்காவல் 3 மாதங்கள் நீட்டிப்பு

ஃபரூக் அப்துல்லாவின் வீட்டுக்காவல் 3 மாதங்கள் நீட்டிப்பு

webteam

ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதலமைச்சர் ஃபரூக் அப்துல்லாவின் வீட்டுக்காவல் மேலும் மூன்று மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆகஸ்ட் மாதம் 5-ஆம் தேதி காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது. அத்துடன் ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் ஆகிய இரண்டும் யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டன. இதைத்தொடர்ந்து ஸ்ரீநகர் தொகுதி எம்பியும், முன்னாள் முதலமைச்சருமான ஃபருக் அப்துல்லா உள்ளிட்ட முக்கிய அரசியல் தலைவர்கள் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டனர். அத்துடன் தொலைத்தொடர்பு உள்ளிட்ட அனைத்து தகவல் பரிமாற்றங்களும் துண்டிக்கப்பட்டு, படிப்படியாக சேவைக்கு வந்தன.

இந்நிலையில் ஃபரூக் அப்துல்லாவின் வீட்டுக்காவல் பொதுப்பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் மூன்று மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஃபரூக் அப்துல்லா மீது வன்முறையை தூண்டியது, அதிகார துஷ்பிரயோகம் உள்ளிட்ட பிரிவுகளில் 27 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. பொதுப் பாதுகாப்பு சட்டத்தின் படி ஒருவர் அதிகப்பட்சமாக இரண்டு ஆண்டுகள் வரை வீட்டுக்காவலில் வைக்கப்படலாம் என்பது குறிப்பிடத்தக்கது.