இந்தியா

வேளாண் சட்டங்கள் வாபஸ்க்கு ஒப்புதல்: ஆனாலும் டெல்லியில் திட்டமிட்டபடி பிரமாண்ட கூட்டம்

வேளாண் சட்டங்கள் வாபஸ்க்கு ஒப்புதல்: ஆனாலும் டெல்லியில் திட்டமிட்டபடி பிரமாண்ட கூட்டம்

JustinDurai
சர்ச்சைக்குரிய மூன்று வேளாண் சட்டங்களை வாபஸ் பெறுவதாக பிரதமர் மோடி அறிவித்திருந்த நிலையில், அவரது தலைமையில் நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்திலும், அதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. எனினும், திட்டமிட்டபடி வரும் 29 ஆம் தேதி டெல்லி எல்லையில் பிரமாண்ட கூட்டம் நடைபெறும் என விவசாய சங்கங்கள் அறிவித்துள்ளன.
வரும் 29 ஆம் தேதி கூடவுள்ள நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரின் முதல் நாளிலேயே மூன்று வேளாண் சட்டங்களையும் வாபஸ் பெறுவதற்கான அவசர மசோதாவை தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அரசியலமைப்பு நாள் கொண்டாடப்படும் அதே நாளில், ஏற்கெனவே திட்டமிட்டபடி டெல்லியின் எல்லையில் பிரமாண்ட கூட்டத்தை நடத்த விவசாய சங்கங்கள் முடிவெடுத்துள்ளன.
வேளாண் சட்டங்களை வாபஸ் பெற மத்திய அரசு முடிவு செய்தாலும், குறைந்தபட்ச ஆதார விலைக்கு, சட்ட ரீதியான உத்தரவாதம் வழங்க வேண்டும், மின்சார திருத்த மசோதா தாக்கல் செய்வதை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட சில கோரிக்கைகளும் நிறைவேற்றப்பட வேண்டும் என விவசாய சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன. மேலும், வேளாண் சட்டங்களுக்கு எதிராக தொடங்கப்பட்ட போராட்டம் வரும் 29 ஆம் தேதியுடன் ஓராண்டு நிறைவு பெறவுள்ளதாலும், இந்த பிரமாண்ட கூட்டத்திற்கு விவசாய சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ளன.