இந்தியா

துப்பாக்கியால் சுட்டுக் கொண்டு காவல் ஆணையர் தற்கொலை 

துப்பாக்கியால் சுட்டுக் கொண்டு காவல் ஆணையர் தற்கொலை 

webteam

 உத்தரப்பிரதேசம் மாநிலம் ஃபரிதாபாத் நகரின் இணை ஆணையர் தன்னை சுட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். 

உத்தரப்பிரதேச மாநிலம் ஃபரிதாபாத் நகரின் இணை ஆணையர் விக்ரம் கபூர்(59). இவர் கடந்த 2017 ஹரியானாவின் மாநில சிவில் சர்வீஸ்லிருந்து ஐபிஎஸ் பிரிவுக்கு பதவி உயர்வு பெற்றார். அதன்பின்னர் பல்வேறு பதவிகளில் பணியாற்றி வந்தார். 

இந்நிலையில் இன்று காலை இவர் தனது வீட்டில் தற்கொலை செய்துள்ளார். இவர் தனது துப்பாக்கியால் தலையில் சுட்டுக்கொண்டு இறந்துள்ளதாக காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவரது தற்கொலைக்கான காரணம் குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். இவர் அடுத்த ஆண்டு காவல்துறை பணியிலிருந்து ஓய்வு பெற இருந்தது குறிப்பிடத்தக்கது.