இந்தியா

முதல் பெண் பைலைட் அவானி சதுர்வேதி பற்றி சில தகவல்கள்

முதல் பெண் பைலைட் அவானி சதுர்வேதி பற்றி சில தகவல்கள்

rajakannan

இந்திய விமானப் படையின் முதல் பெண் விமானியாக பொறுப்பேற்றுக் கொண்ட அவானி சதுர்வேதி, குஜராத் மாநிலம் ஜாம்நகர் விமானப் படைத்தளத்தில் எம்.ஐ.ஜி. 21 ரக போர் விமானத்தை தனியாக ஓட்டிச் சென்றார். இதன்மூலம் போர் விமானத்தைத் தனியாக இயக்கிய முதல் பெண் விமானி என்ற பெருமையை இவர் பெற்றார். முதல் பெண் விமானியாக தேர்வான அவானி சதுர்வேதிக்கு பலரும் தங்களது பாராட்டுதல்களை தெரிவித்து வருகின்றனர்.

அவானி பற்றி சில தகவல்கள்:-

  • மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள சத்னாவைச் சேர்ந்தவர் அவானி சதுர்வேதி
  • 1993ம் ஆண்டு அக்டோபர் 27-ம் தேதி பிறந்தவர். 
  • தந்தை தின்கர் சதுர்வேதி, மத்திய பிரதேச அரசின் நீர்வள மேம்பாட்டு துறையில் பொறியாளராக உள்ளார்.
  • அவானியின் மூத்த சகோதரரும் ராணுவ அதிகாரியாக உள்ளார்.
  • மத்திய பிரதேசத்தின் டியிலாண்ட் பகுதியில் பள்ளிப் படிப்பை முடித்தார்.
  • ராஜஸ்தானில் உள்ள பானஸ்தாலி பல்கலைக் கழகத்தில் பி.டெக் படிப்பை முடித்தார். 
  • விமானப்படையில் சேர்வதற்கான ஏ.எப்.சி.ஏ.டி தேர்வை 2014ம் ஆண்டு எழுதினார். (AFCAT Exam)
  • கல்லூரியில் படிக்கும் போதே பிளையிங் கிளப்பில் சேர்ந்தார். அங்குதான் முதலில் விமானத்தில் பறப்பதற்கான அனுபவத்தைப் பெற்றார். 
  • விமானப்படை தேர்வில் மெரிட் லிஸ்டில் இரண்டாம் இடம் பிடித்தார். 
  • இந்திய விமானப்படையின் போர் விமானிகளாக பொறுப்பேற்ற மூன்று பெண்களில் ஒருவர் இவர்.
  • பாவனா காந்த், மோகனா சிங் ஆகிய இருவருடன் அவானி சதுர்வேதி கடந்த ஆண்டு ஜூன் மாதம் பொறுப்பேற்றார்.
  • மேற்கு வங்கத்தில் உள்ள விமானப்படைப் பயிற்சி மையத்தில் அவருக்கு பிரத்யேகமான பயிற்சிகள் வழங்கப்பட்டன.
  • அவானிக்கு செஸ், டேபிள் டென்னிஸ் விளையாட பிடிக்கும். பெயிண்டிங் வரைவதில் ஆர்வமுடையவர்.
  • ஐதராபாத் நகரில் உள்ள விமானப்படை அகடாமியில் ஜனவரி 2015ம் ஆண்டு முதல் ஓராண்டு பயிற்சியை முடித்தார்.
  • போர் விமானத்தை இயக்கிய இந்தியாவின்முதல் பெண் விமானி என்ற பெருமையைப் பெற்றார். 
  • பிப்ரவரி 22ம் தேதி முதல் விமானப்படையில் தனது பணியை தொடங்கியுள்ளார்.