இந்தியா

போலி ஃபேஸ்புக் கணக்குகள் அதிரடி நீக்கம்

webteam

தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்திய போலி பேஸ்புக் கணக்குகளை பேஸ்புக் நிறுவனம் நீக்கியுள்ளது.

அமெரிக்கத் தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் கணக்குகளை பேஸ்புக் நிறுவனம் நீக்கியுள்ளது.  அமெரிக்காவில் வரும் நவம்பர் மாதம் இடைக்கால தேர்தல் நடக்க உள்ளது.

இந்தத் தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தும் வகையிலும் சிலருக்கு சாதகமாகவும், சிலருக்கு எதிராகவும் தகவல்களை பரப்ப போலியான பேஸ்புக் கணக்குகள் உருவாக்கப்பட்டுள்ளதாக பேஸ்புக் நிறுவனம் கூறியுள்ளது. இதனை அனுமதிக்க முடியாது எனத் தெரிவித்துள்ள பேஸ்புக் நிறுவனம் 32 போலி கணக்குகளை நீக்கியுள்ளது. மேலும் முதல்கட்ட விசாரணை நடந்து வருவதாகவும் யார் மூலம் போலி கணக்குகள் உருவாக்கப்பட்டன என ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும் பேஸ்புக் நிறுவனம் கூறியுள்ளது. நீக்கப்பட்ட போலி கணக்குகளை சுமார் 3 லட்சம் பேர் பின் தொடர்ந்திருந்ததும் தெரிய வந்துள்ளது.