இந்தியா

பேஸ்புக் பதிவு சர்ச்சை: மேற்கு வங்கத்தில் மீண்டும் கலவரம்!

பேஸ்புக் பதிவு சர்ச்சை: மேற்கு வங்கத்தில் மீண்டும் கலவரம்!

webteam

மேற்கு வங்க மாநிலம் பசிர்ஹட் பகுதியில் நடந்த மதக் கலவரத்தை அடுத்து இன்று ஒருவர் வெட்டிக்கொல்லப்பட்டார். இதையடுத்து அங்கு மீண்டும் கலவரம் வெடித்துள்ளது.

மேற்கு வங்க மாநிலத்தில் ஒரு மதத்தினரின் புனித தலம் பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேஸ்புக்கில் பதிவு செய்த தகவல் பரவியதையடுத்து, பாதுரியா பகுதியில் மதக்கலவரம் ஏற்பட்டது. இரண்டு மதத்தைச் சேர்ந்தவர்கள் மாறி மாறி தாக்கிக் கொண்டதால் அப்பகுதி போர்க்களமாக மாறியது. இதையடுத்து அருகில் உள்ள பகுதிகளுக்கும் கலவரம் பரவியது.

கலவரக்காரர்கள் கடைகளை அடித்து நொறுக்கினர். கலவரத்தை அடக்க, எல்லைப் பாதுகாப்பு படையை சேர்ந்த 400 வீரர்கள் வரவழைக்கப்பட்டனர். கலவரம் நடந்த பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. வதந்திகள் பரவாமல் தடுக்க, இன்டர்நெட் சேவைகளும் நிறுத்தப்பட்டன. இதனிடையே, இன்று 65 வயதுடைய ஒருவர் கொல்லப்பட்டதால் கலவரம் மீண்டும் வெடித்துள்ளது. கடைகள் சூறையாடப்பட்டன.