இந்தியா

"மோடி அரசின் அதிகாரக் குவிப்பால் பொருளாதார வீழ்ச்சி" ரகுராம் ராஜன்

"மோடி அரசின் அதிகாரக் குவிப்பால் பொருளாதார வீழ்ச்சி" ரகுராம் ராஜன்

jagadeesh

பிரதமர் அலுவலகத்திடம் அதிகப்படியான அதிகாரங்கள் குவிந்திருப்பது நாட்டுக்கு நல்லதல்ல என்று ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார். இந்தியா டுடே இதழில் அவர் எழுதியுள்ள கட்டுரையில், இந்தியா இப்போது மந்தகதி வளர்ச்சியில் இருப்பதாகக் கூறியுள்ளார். 

பொருளாதார மந்தநிலைக்கான காரணத்தை புரிந்து கொள்ள, மத்திய அரசில் அதிகாரக் குவிப்பில் இருந்துதான் தொடங்க வேண்டும் என்று குறிப்பிட்‌டார். முடிவுகள் மட்டுமின்றி யோசனைகள், திட்டங்களும் பிரதமரைச் சுற்றி சிலரால் எடுக்கப்படுவது தவிர்க்கப்பட வேண்டும் என்றும் ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார். 

பொருளாதார மந்தநிலையை சரி செய்யும் நடவடிக்கையில் முதலாவதாக பிரச்னையை மத்திய அரசு ஒப்புக்கொள்ள வேண்டியது அவசியம் என்றும் ரகுராம் ராஜன் கூறியுள்ளார்.