இந்தியா

கத்தாருக்கு கூடுதல் விமானங்கள்: அமைச்சர் தகவல்

கத்தாருக்கு கூடுதல் விமானங்கள்: அமைச்சர் தகவல்

webteam

கத்தாரில் இருந்து வரவிரும்பும் இந்தியர்களுக்காக கூடுதல் விமானங்களை இயக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. 
    
கத்தாரில் வசிக்கும் இந்தியர்கள் நாடு திரும்ப விரும்பினால் அவர்களுக்கு கூடுதலாக, சிறப்பு விமானங்களை இயக்க விருப்பதாக மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் அசோக் கஜபதி ராஜூ தெரிவித்துள்ளார். இந்தியன் ஏர்லைன்ஸ் மற்றும் தனியார் நிறுவனமான ஜெட் ஏர்வேஸ் கூடுதல் விமானங்களை இயக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொச்சி, திருவனந்தபுரம் மற்றும் மும்பையிலிருந்து கத்தார் தலைநகர் தோஹாவுக்கு சிறப்பு விமானங்கள் இயக்கப்படுகின்றன. 25-ம் தேதி முதல் அடுத்த மாதம் 8-ம் தேதி வரை இந்த விமானங்கள் இயக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த நடவடிக்கை, இந்தியர்களை வெளியேற்றும் நடவடிக்கை இல்லை என்றும், இந்தியர்கள் ஒவ்வொருவரும் பாதுகாப்பாக உள்ளனர் என்றும் இந்திய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் கோபால் பாக்லே தெரிவித்துள்ளார். 

தீவிரவாத அமைப்புகளுக்கு நிதியுதவி செய்வதாகவும் ஐஎஸ் தீவிரவாதிகளை ஊக்குவிப்பதாகவும் கத்தார் மீது பஹ்ரைன், சவுதி அரேபியா உள்ளிட்ட நாடுகள் கூறின. மேலும் கத்தாருடனான ராஜாங்க ரீதியிலான உறவைத் முறித்துக் கொள்வதாகவும் அந்த நாடுகள் அறிவித்தன. இதைத்தொடர்ந்து கத்தாருடன் கடல் மறும் வான்வழி
போக்குவரத்தையும் அந்த நாடுகள் துண்டித்துக்கொண்டன.