இந்தியா

“ஜே.என்.யு வன்முறையை பகிரங்கமாக கண்டிக்கிறேன்” - வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்

“ஜே.என்.யு வன்முறையை பகிரங்கமாக கண்டிக்கிறேன்” - வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்

webteam

ஜே.என்.யு-வில் நடந்த வன்முறையை பகிரங்கமாக கண்டிப்பதாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் முகமூடி அணிந்த கும்பல் ஒன்று வளாகத்தில் புகுந்து, திடீர் தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதலில் மாணவர் சங்கத் தலைவர் அய்ஷி கோஷ் காயமடைந்தார். இன்னும் சிலர் சிகிச்சைக்காக எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த விவாகரம் தொடர்பாக தகவலறிந்த காவல்துறையினர், பல்கலைக்கழகத்தின் வளாகத்திற்கு முன்பு குவிந்துள்ளனர். தங்களை தாக்கிய கும்பல், மீது மாணவர் சங்கத் தலைவர் அய்ஷி கோஷ் குற்றச்சாட்டுகளை அடுக்கியுள்ளார். இதற்கிடையே மாணவர்கள் தாக்குதலை கண்டித்து போராட்டம் நடத்தினர்.

இந்நிலையில் ஜே.என்.யு வளாகத்தில் நடந்த வன்முறை தொடர்பாக ட்விட்டரில் கண்டனம் தெரிவித்துள்ள வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், “ஜே.என்.யு-வில் என்ன நடக்கிறது என்பதை புகைப்படங்கள் மூலம் பார்க்கிறேன். அங்கு நடந்த வன்முறையை பகிரங்கமாக கண்டிக்கிறேன். இது பல்கலைக்கழக கலச்சாரம் மற்றும் பாரம்பரியத்திற்கு முற்றிலும் எதிரானது ஆகும்” எனத் தெரிவித்துள்ளார்.